கேரளா- விஷ மது அருந்திய 3 பேர் உயிரிழப்பு – 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

 

கேரளா- விஷ மது அருந்திய 3 பேர் உயிரிழப்பு – 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

கேரளா

கேரள மாநிலம் பாலக்காட்டில் விஷத் தன்மைவாய்ந்த மதுவை அருந்தியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உட்பட மேலும் 12 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள பழங்குடியினர் காலனியில் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது

கேரளா- விஷ மது அருந்திய 3 பேர் உயிரிழப்பு – 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

மது அருந்திய சில மணி நேரத்தில் ஒருவருக்கு வாந்தி ஏற்பட்டு, அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை மேலும் இருவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட மேலும் 12 பேர் பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளா- விஷ மது அருந்திய 3 பேர் உயிரிழப்பு – 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு பாலக்காடு மாவட்ட எஸ்.பி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் பழங்குடியினர் அருந்திய மதுவில் சானிடைசர் கலந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை, உடற்கூறாய்வு செய்தால் மட்டுமே உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே சம்பவ இடத்தில் கேரள மதுவிலக்கு துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.