கிழடியில் மீண்டும் தொடங்கியது 6 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி; முன்னோர்களின் வாழ்வியல், கலாச்சாரத்தை அறிய முடியும் என தகவல்!

கிழடியில் மீண்டும் தொடங்கியது 6 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி; முன்னோர்களின் வாழ்வியல், கலாச்சாரத்தை அறிய முடியும் என தகவல்!

கீழடி அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஆயிரக் கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன. தொன்மையான இந்த பொருட்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

கிழடியில் மீண்டும் தொடங்கியது 6 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி; முன்னோர்களின் வாழ்வியல், கலாச்சாரத்தை அறிய முடியும் என தகவல்!

கீழடியில் காட்சியகம் அமைப்பதற்கு முன்னரே தற்காலிக கண்காட்சி நடத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்ததற்கு இணங்க மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர். அதனைத்தொடர்ந்து 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச்23 ஆம் தேதியுடன் அப்பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி முதல் மீண்டும் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியிருக்கின்றன.

கிழடியில் மீண்டும் தொடங்கியது 6 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி; முன்னோர்களின் வாழ்வியல், கலாச்சாரத்தை அறிய முடியும் என தகவல்!

இது குறித்து பேசிய அதிகாரிகள், 5 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி கீழடியில் மட்டுமே நடந்ததாகவும் அதில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமான பணியின் தொடர்ச்சியை அறிய 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கியுள்ளதாகவும் கூறினர். இதன் மூலம் முன்னோர்களின் வாழ்வியல், கலாச்சாரம், இன மரபியல் உள்ளிட்டவற்றை அறிய முடியும் என்றும் கீழடி , அகரம், கொந்தகையை தொடர்ந்து தற்போது மணலூரில் அகழ்வாராய்ச்சி நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.