பிப்ரவரி முதல் வாரத்தில் கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடக்கம்

 

பிப்ரவரி முதல் வாரத்தில் கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடக்கம்

கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கப்படவுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் பழமையான பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட பொருட்கள், தங்க ஆபரணங்கள், மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. தொன்மையான இந்த பொருட்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தியது. 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பரில் நிறைவடைந்தது.

பிப்ரவரி முதல் வாரத்தில் கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடக்கம்

கடந்த 2015ம் ஆண்டு முதல் இதுவரை கீழடியில் 6 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிக்கான ஒப்புதலை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. இந்நிலையில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளார் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்ற கீழடி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களிலும் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. இன்று அல்லது நாளை அகழ்வாராய்ச்சி துவங்க உள்ள தேதி அறிவிக்கப்பட உள்ளது.