முதுமையிலும் உறுதியான பற்கள் வேண்டுமா? – இதை டிரை பண்ணுங்க

 

முதுமையிலும் உறுதியான பற்கள் வேண்டுமா? – இதை டிரை பண்ணுங்க

பற்களை பராமரிப்பது என்பது நம் ஆயுள் முழுவதும் நலமுடன் வாழ நாம் செய்யும் மிகப் பெரிய காரியம். இளமையிலே பற்களை பராமரிக்காமல் அதை இழந்துவிட்டால் முதுமையில் அதற்கான பலனை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

பற்களை பாதுகாக்க செய்ய வேண்டியவை பற்றி இங்கே காண்போம்…

முதுமையிலும் உறுதியான பற்கள் வேண்டுமா? – இதை டிரை பண்ணுங்க

தினமும் இரண்டு வேலை பற்களைத் துலக்குங்கள், சாப்பிட்டதும் வாய் கொப்பளியுங்கள் என்று என்னதான் சொன்னாலும் யாரும் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. என்ன ஆனாலும் சரி இரவில் பல் துலக்காமல் தூங்கச் செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நாம் காலையில் பல் துலக்கிய பிறகு உட்கொண்ட உணவு வாயில் தங்குவதால் பாக்டீரியா வளர்ச்சி அதிகரிக்கிறது. பற்களின் எனாமலைத் தாக்க அதற்கு வாய்ப்பளிக்காமல் இருக்க இரவு பல் துலக்குவது அவசியம்.

சிலர் கடமைக்கு பல் துலக்குவது உண்டு. இப்படி செய்வதால் யாருக்கு கெடுதல் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு நிமிடம் பல் துலக்குகிறோம், அதை ஒழுங்காக செய்தால் பற்சிதைவு ஏற்படுவதைத் தவிர்த்துவிடலாம்.

பற்களைத் துலக்கிவிட்டு நாக்கை சுத்தம் செய்ய பலரும் தவறி விடுகின்றனர். நாக்கிலும் கூட பாக்டீரியா வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும். எனவே, பல் துலக்கியதும் நாக்கை மென்மையாக சுத்தம் செய்ய வேண்டும். சிலர் பல் துலக்குகிறேன் என்று மணிக் கணக்கில் பிரஷ் செய்வார்கள். இது எனாமலை பாதிக்கும்.

முதுமையிலும் உறுதியான பற்கள் வேண்டுமா? – இதை டிரை பண்ணுங்க
Woman biting celery. Closeup photo.

நாம் பயன்படுத்தும் பேஸ்டின் சுவை எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்து பேஸ்ட் வாங்குவோம். அதில் தவறு இல்லை… அதனுடன் ஃபுளோரைட் உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். வாயின் ஆரோக்கியம், பற்களை பராமரிக்க ஃபுளோரைட் அவசியம். நம்முடைய வாயில் உள்ள எனாமலை பாக்டீரியா சிதைக்கிறது. இதைத் தடுத்து எனாமலை பாதுகாக்கும் பணியை ஃபுளோரைட் செய்கிறது.

தினமும் போதுமான அளவில் தண்ணீர் அருந்துவது வாயின் ஆரோக்கியத்தைக் காக்க உதவும். தண்ணீர் அருந்தும்போது வாயில் உள்ள பாக்டீரியா அடித்துச் செல்லப்படும். சோடா, குளிர்பானம், ஜூஸ் போன்றவற்றில் உள்ள சர்க்கரை உள்ளிட்டவை பற்களை பாதிக்கும். அதற்கு பதில் தண்ணீர் அருந்துவது வாயின் ஆரோக்கியத்தை காக்க உதவும்.

தினமும் அதிக அளவில் பச்சைக் காய்கறி, பழங்களை நன்கு கடித்து சாப்பிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தாடைகள், பற்கள் உறுதியாகும். நன்கு மென்று விழுங்கும்போது வாயில் உள்ள பாக்டீரியா அகற்றப்படும்.