மே 14ம் தேதி கேதர்நாத் யாத்திரை தொடங்கும் – உத்தரகாண்ட் அரசு

 

மே 14ம் தேதி கேதர்நாத் யாத்திரை தொடங்கும் – உத்தரகாண்ட் அரசு

கும்பமேளாவை தொடர்ந்து மே.14 முதல் கேதர்நாத் யாத்திரையை தொடங்க உத்தரகாண்ட் அரசு திட்டமிட்டுள்ளது.

மே 14ம் தேதி கேதர்நாத் யாத்திரை தொடங்கும் – உத்தரகாண்ட் அரசு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டதால் கொரோனா பரவல் அதிகரித்தது. இந்த சூழலில் மே. 14 ஆம் தேதி முதல் ‘சார் தாம் யாத்திரை’ என அழைக்கப்படும். கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் ஆகிய 4 புண்ணிய தலங்களுக்கும் செல்லும் யாத்திரை தொடங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த புனித யாத்திரைக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை நெகட்டிவ் சான்றிதல், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட இ-பாஸ் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முகக்கவசமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரசாதங்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக பக்தர்கள் கோயில் பகுதிக்குகள் அனுமதிக்கப்படவில்லை.

மே 14ம் தேதி கேதர்நாத் யாத்திரை தொடங்கும் – உத்தரகாண்ட் அரசு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி, மாநிலத்தில் 1,863 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது. கடந்த ஏப்ரல் 27 க்குள், இந்த எண்ணிக்கை 43,032 ஆக உயர்ந்தது. இதற்கு காரணம் கும்பமேளாதான் காரணம் எனக் கூறப்படுகிறது.