Home விளையாட்டு கிரிக்கெட் சென்னை வெற்றியைத் தடுத்த பேட்ஸ்மேன் - ரசிகர்களால் வறுபடும் கேதார் ஜாதவ்

சென்னை வெற்றியைத் தடுத்த பேட்ஸ்மேன் – ரசிகர்களால் வறுபடும் கேதார் ஜாதவ்

ஐபிஎல் திருவிழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதல் நடந்தது. டாஸ் வின் பண்ணிய கொல்கத்தா முதலில் பேட்டிங் என முடிவெடுத்தது. ஆனால், அந்த அணியில் ராகுல் திரிபாதி 81 ரன்கள் குவித்தார். அவரைத் தவிர அந்த அணியில் வேறு எவரும் 20 ரன்களைக்கூட எடுக்க வில்லை. அவருக்கு அடுத்த ஸ்கோர் சுனில் நரேன் 17 ரன்கள். அணியின் ஸ்கோர் 167 என்பதாக முடிவானது.

பிராவோ 3 விக்கெட்டுகளையும் சாம் கர்ரன், தாக்கூர், கே. ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

எளிதான ஸ்கோர் என்பதால் நிச்சயம் சென்னைக்கு வெற்றிதான் என ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

ஷேன் வாட்சனும் டூ பிளஸியுமே நல்ல தொடக்கத்தைத் தந்தார்கள். 17 ரன்களோடு டூ பிளஸி அவுட்டானர். அம்பத்தி ராயுடு 30 ரன்களில் அவுட்டாக, தோனி இறங்கினார். அவரும் 11 ரன்களும் ஆட்டமிழக்க, சாம் கர்ரன் அடித்து ஆடினார். 1 பவுண்டரி, 1 சிக்ஸர் வீசி 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, கேதார் ஜாதவ் – ஜடேஜா ஜோடி இணைந்தது.

இந்த நிலையில் வரை சென்னை வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், கேதார் ஜாதவ் ஏகப்பட்ட பந்துகளை வீணடித்தர்.

கேதார் ஜாதவ் எதிர்கொண்டது 12 பந்துகள். அவற்றில் 8 டாட் பால்கள். அதுவும், ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் எனும் வேளையிலும் என்பதுதான் உட்சபட்ச வேதனை. சேஸிங்கில் இப்படி ஒருவர் பந்துகளை வீணடிப்பது அணியைத் தோல்விக்கே அழைத்துச் செல்லும். அப்படித்தான் சென்றது.

கடைசி ஓவரில் 6 பந்துகளில் 26 ரன்கள் தேவை எனும்போது இரண்டு டாட் பால்கள், ஒரு பந்தில் சிங்கிள் ரன் என கேதார் ஜாதவ் ஆடியதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவர் என்ன கொல்கத்தா வெற்றிக்காக ஆடுகிறாரா என்று ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு மோசமாக இருந்தது.

இறுதியில் கடைசி மூன்று பந்துகளில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என ஜடேஜா விளாசியும் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வியைத் தழுவியது.

கேதார் ஜாதவை நேற்றைய போட்டியின் ஆடும் 11 பேரில் சேர்க்கக்கூடாது என்பதே பலரின் கருத்தாக இருந்தது. ஏனெனில், இந்த ஐபிஎல் சீசன் ஒரு போட்டியிலும் அவர் சரியாக ஆடவே இல்லை. சாம் கர்ரனை முன்கூட்டியே இறக்கியதைப் போலவே பிராவோவை ஜாதவ்க்குப் பதில் இறக்கியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

போட்டி முடிந்ததும் சோஷியல் மீடியாவில் கேதார் ஜாதவை ரசிகர்கள் வறுத்தெடுக்கிறார்கள். ஏகப்பட்ட மீம்ஸ்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதுவும் அவர் ஃபீல்டர்களை எண்ணியதை வைத்து கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஒருவேளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த சீசனில் ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போனால், இந்தத் தோல்வியும் முக்கியக் காரணமாக அமையும். அதாவது கேதார் ஜாதவே காரணமாக இருப்பார். இனியாவது அடுத்தடுத்த போட்டிகளில் ஜாதவைப் பயன்படுத்துவது பற்றி தோனி நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஏனெனில், இனி ஒவ்வொரு போட்டியும் வென்றாக வேண்டும். இல்லையென்றால் ப்ளே ஆப் செல்வது கடினமாகி விடும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு எப்போது? – அமைச்சர் பதில்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட கல்லூரிகள், டிசம்பர் மாதம் திறக்கப்பட்டன. இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகள் திறக்கப்பட்ட...

‘பாரிஸ் ஒப்பந்தம் முதல் மெக்சிகோ சுவர் வரை’ – டிரம்ப் உண்டாக்கிய காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பைடன்!

பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தம், இனவெறிக்கு எதிரான உத்தரவு, இஸ்லாமியர்களுக்கான தடை நீக்கம், மெக்சிகோ சுவர் உள்ளிட்ட அதிமுக்கியமான 15 கோப்புகளில் அதிவேகமாக புதிய அதிபர் ஜோ பைடன்...

‘கொள்ளையில் சிக்கியதால் கொலை முயற்சி’ : கையும் களவுமாக சிக்கிய கும்பல்!

திருப்பத்தூர் அருகே கொள்ளை சம்பவத்தில் சிக்கிய 2 பேர், அதிலிருந்து தப்பிக்க கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருக்கும் பெரியபேட்டை...

40 லிட்டர் ரத்தம் வெளியேறி பலியான யானை… மனிதர்களின் காட்டு மிராண்டித்தனம்!

மனிதர்களின் காட்டுமிராண்டித்தனமானத்தால், அராஜக செயலினால் உடலில் இருந்து 40 லிட்டர் ரத்தம் வெளியேறி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது யானை. நீலகிரி மாவட்டத்தில் மசினக்குடி பகுதியில் அடிக்க சுற்றிக்கொண்டிருக்கும்...
Do NOT follow this link or you will be banned from the site!