கே.சி. வீரமணி வீட்டிலிருந்து 623 சவரன், 9 சொகுசு கார்கள் பறிமுதல்

 

கே.சி. வீரமணி வீட்டிலிருந்து 623 சவரன், 9 சொகுசு கார்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி வீரமணி வீட்டிலும் அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் 28 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்

கே.சி. வீரமணி வீட்டிலிருந்து 623 சவரன், 9 சொகுசு கார்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சூளைமேட்டில் சிவானந்த சாலையில் உள்ள திருமலா பால் நிறுவன மேலாளர் ராம ஆஞ்சிநேயலூ வீட்டை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சோதனைக்காக சென்ற அதிகாரிகள், வீட்டில் யாரும் இல்லாததால் சீல் வைத்தனர். இதேபோல் கே.சி. வீரமணியின் தொழில் பங்குதாரரான ராம ஆஞ்சநேயலுவின்
சென்னை அண்ணாநகர் ஆர் பிளாக்க்கில் உள்ள மற்றொரு வீடும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. அந்த வீட்டிலும் யாரும் இல்லாததால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

சோதனையில், முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் 34 லட்ச ரூபாய் பணமும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அன்னியச் செலாவணி டாலரும், 4.9 87 கிலோ மதிப்பில் 623 சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி, வங்கிக் கணக்கு மற்றும் புத்தகங்கள் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரோல்ஸ்ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கே.சி வீரமணி, தனது வீட்டில், 30 லட்ச ரூபாய் மதிப்பில் 275 யூனிட் மணலை பதுக்கியிருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.