‘திமுக ஆட்சியில்’ தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கத் தொடங்கியுள்ளது – முன்னாள் அமைச்சர் விமர்சனம்!

 

‘திமுக ஆட்சியில்’ தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கத் தொடங்கியுள்ளது – முன்னாள் அமைச்சர் விமர்சனம்!

திமுக ஆட்சியில் தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கத் தொடங்கியிருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, 10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சியில் தமிழகம் இருளில் மூழ்கியிருந்தது. அதிமுக அரசு வந்த பிறகு மின்மிகை மாநிலமாக மாறியது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தமிழகம் மீண்டும் இருளில் மூழ்க தொடங்கியுள்ளது என்று குற்றஞ்சாட்டினார்.

‘திமுக ஆட்சியில்’ தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கத் தொடங்கியுள்ளது – முன்னாள் அமைச்சர் விமர்சனம்!

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக காலத்தில் கொரோனா கட்டுப்படுத்தப் படவில்லை என அமைச்சர் சேகர் பாபு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட திமுக ஆட்சியில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதிமுக அமைச்சர்கள், முதல்வர், துணை முதல்வர் என அனைவரும் தடுப்பு பணியில் ஈடுபட்டோம். அதனால், பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த ஒரு சில வாரங்களிலேயே நோய் பரவல் அதிகமானதை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றார்.

மேலும், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட நினைக்கும் சசிகலாவின் முயற்சி பலிக்காது. சசிகலா அணி, தினகரன் அணி இரண்டும் ஒன்றுதான். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலாவுடன் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.