“சசிகலா, இபிஎஸ், ஓபிஎஸ் என அனைவரும் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளவேண்டும்; அப்ப தான் ஓட்டு கிடைக்கும்”

 

“சசிகலா, இபிஎஸ், ஓபிஎஸ் என அனைவரும் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளவேண்டும்; அப்ப தான் ஓட்டு கிடைக்கும்”

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் எம்.பி, கே.சி.பழனிசாமி, “அதிமுகவிற்கு யார் தலைவர் என்ற கேள்வியையே 60 நாட்கள் கொண்டு சென்றால் தேர்தலில் அதிமுகவிற்கு யார் வாக்களிப்பார்கள். தற்போது ஒன்றுபட்ட அதிமுக தேவை. தொண்டர்களால் தேர்வு செய்யக்கூடிய பொதுச்செயலாளர் அதிமுகவிற்கு தேவை. டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அவரை அதிமுகவில் சேர்த்துக் கொள்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்ற கருத்தை கே.பி.முனுசாமி கண்டனத்திற்குரியது. தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாத கே.பி.முனுசாமி கட்சியை பலவீனப்படுத்த வேண்டாம். அதிமுக அடிப்படை தொண்டர்கள் எதிர்பார்ப்பு ஒன்றுபட்ட அதிமுக என்பதுதான்.

“சசிகலா, இபிஎஸ், ஓபிஎஸ் என அனைவரும் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளவேண்டும்; அப்ப தான் ஓட்டு கிடைக்கும்”

இன்னும் 60 நாட்களில் தேர்தல் வர உள்ள நிலையில் திமுக வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. கட்சியை விட தான் பெரியவர் என நினைப்பவர்கள் தனியாகவே கட்சியை நடத்திக் கொள்ளலாம். இன்றைக்கு இ.பி.எஸ், ஓ.பி.எஸ், தினகரனோ அதிமுக அடையாளத்தைவிட்டு அவரவர் தொகுதியில் நின்றால் வெற்றி பெற முடியுமா? அதிமுகவிற்கு யார் தலைவர் என்ற கேள்வியையே 60 நாட்கள் கொண்டு சென்றால் தேர்தலில் அதிமுகவிற்கு யார் வாக்களிப்பார்கள். தற்போது ஒன்றுபட்ட அதிமுக தேவை. சசிகலா, இ.பி.எஸ், ஓ.பி.எஸ் எல்லோரும் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். யார் தலைவர் என்பதை தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம். கட்சிக் கொடியை எல்லோரும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு அதிமுக தொண்டரும் அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை உள்ளது

சசிகலாவை சேர்க்க முடியாது என சொல்ல ஜெயக்குமாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. அதிமுக இணைப்பிற்கு ஓவ்வொருவரின் ஆணவமே தடையாக உள்ளது. சுயநலத்தை விட்டு இயக்கம் பெரிது என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். ஜெயலலிதா மரணம் இயற்கை மரணமாக இருந்தாலும் கூட அதை அரசு உடனடியாக சொல்ல வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் ஏதுமில்லை எனில் எதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். ஓ.பி.எஸ் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கை ஒரு முடிவிற்கு கொண்டு வர வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை திமுக ஆட்சிக்கு வந்து வெளிக்கொணரும் என்பது அதிமுகவிற்கு கேவலம்” எனக் கூறினார்.