நல்ல திட்டங்களை மனசுல வச்சு அதிமுகவுக்கு ஓட்டு போட்டுங்க மக்களே! அமைச்சர் அதிரடி

 

நல்ல திட்டங்களை மனசுல வச்சு அதிமுகவுக்கு ஓட்டு போட்டுங்க மக்களே! அமைச்சர் அதிரடி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி மத்திய கூட்டுறவு வங்கியின் சாா்பில் 375 நெசவாளாா்களுக்கு ரூ.18.75 மதிப்பிலான மானியத்தொகையை நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் வழங்கிய சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், கவுண்டன்புதூாில் ரூ.8.66 மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன்பின்னா் கரட்டுப்பாளையம் மற்றும் வைரமங்கலத்தில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளையும் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

நல்ல திட்டங்களை மனசுல வச்சு அதிமுகவுக்கு ஓட்டு போட்டுங்க மக்களே! அமைச்சர் அதிரடி

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், “குடும்ப தேவைக்கான 50 சதவிகித தேவைகளை தமிழக அரசு நிறைவேற்றிவருகிறது. தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தியுள்ளது. சாப்பாட்டிற்கு பஞ்சமில்லாத அரசாக செயல்படுகிறது. விவசாய விளைபொருட்களுக்கும் உாிய விலை கிடைத்துவருகிறது. விலைவாசியும் கட்டுக்குள் உள்ளது. முதல்வாின் கவனத்திற்கு சென்றால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக தீா்வு காணப்படும். விவசாயிகளுக்கு ஓா் ஆண்டிற்கு வட்டில்லா பயிா் கடன்கள் அதிகளவு வழங்கப்பட்டுவருகிறது..

தமிழகத்தில் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. நல்ல திட்டங்களை மனதில் வைத்துக்கொண்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிமுவிற்கு வாக்களிக்க வேண்டும். நாட்டிற்கு தேவையான நான்கு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த எதிா்கட்சிகள் எதிா்ப்பு தொிவிப்பதுடன் மக்களை தூண்டிவிடுவதால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. வரும் சட்டமன்ற தோ்தலில் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வா், அதில் எந்த மாற்றமும் இல்லை” எனக் கூறினார்.