’இப்பொழுது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர்’’- அழுத்தமாகச் சொல்லும் அமைச்சர் கே.சி.கருப்பணன்

 

’இப்பொழுது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர்’’- அழுத்தமாகச் சொல்லும் அமைச்சர் கே.சி.கருப்பணன்

தற்போது கோயம்பேடு தவிர்த்து அனைத்து இடங்களிலும் காற்று மாசுபாடு குறைந்த அளவே உள்ளது. இப்பொழுது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் ஆவார் என்று கவுந்தப்பாடி பகுதியில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை
தொடங்கிவைத்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்…

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தபாடியில் 5690 வீடுகளுக்கு ரூ.4.33 கோடி மதிப்பீட்டில் தனிநபர் குடிநீர் திட்டம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் சாலை மேம்பாட்டுபணிகள், குடிநீர் திட்டப்பணிகள், சிறு பாலங்கள் கட்டுதல் என ரூ.10.28 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள கட்டுமானப்பணிகளுக்கு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பூமிபூஜையுடன் தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

’இப்பொழுது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர்’’- அழுத்தமாகச் சொல்லும் அமைச்சர் கே.சி.கருப்பணன்

இந்த நிகழ்வுக்கு பின்னர அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ’’தற்போது கோயம்பேடு தவிர்த்து அனைத்து இடங்களிலும் காற்று மாசுபாடு குறைந்த அளவே உள்ளது. பொதுப்போக்குவரத்து தற்போது தான் துவங்கப்பட்டுள்ளதால் காற்றின் மாசு இனிமேல் ஆய்வு செய்யப்படும். கொரனா பரிசோனை அந்த அந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டு வருகிறது’’என்றார்.

’’கோவை செட்டிபாளையத்தில் அமையவுள்ள மருத்துவ கழிவுளை சுத்திகரிப்பு செய்யும் ஆலை குறித்த புகாரினை மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்வார்’’ எனவும் தெரிவித்தார்.

மேலும், ‘’இப்பொழுது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் ஆவார்’’என்றார் உறுதியாக.