• December
    06
    Friday

Main Area

Main



'என்ன மாதிரி இல்லாம எல்லோரும் நல்ல புள்ளைங்களா இருங்க': பிக் பாஸ் கவினின் அட்வைஸ்!

கவின்
கவின்

பிக் பாஸ்  3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் நடிகர் கவின். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னதிரையில்  அறிமுகமான இவர் வேட்டையன் கதாபாத்திரம் மூலம் பலரது பாராட்டைப்  பெற்றார். இதையடுத்து நடிகை ரம்யா நம்பீசனுடன் இணைந்து அவர் நடித்த 'நட்புனா என்னனு தெரியுமா'  திரைப்படம் எதிர்ப்பார்த்தளவு கைகொடுக்கவில்லை. 

kavin

இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் களமிறங்கி அதிகளவு ஆர்மிகளை சம்பாதித்த பெருமை கவினை சாரும். மேலும் காதல், நட்பு உள்ளிட்ட விஷயங்களால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். 

kavin

கவின் ஆர்மிகள் பெய்டு ஆர்மி என்ற விமர்சனம் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கவினின் அடுத்த திட்டங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளவே, கவினின்  ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். திட்டங்கள் குறித்து அறிவிக்காவிட்டாலும், அவர்களை ஏமாற்றப்படி கவினும் அடிக்கடி தனது புகைப்படங்களை  இணையத்தில் பதிவிட்டு வருகிறார். 

 

இந்நிலையில் கவின் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கவின் தனது  சிறுவயது  புகைப்படத்தை பதிவிட்டு, பேஸிக்கா நான் நல்ல பையன்.. கொஞ்சம் தா... என்ன மாதிரி இல்லாம எல்லோரும் நல்ல புள்ளைங்களா இருங்க. குழந்தைகள் தின வாழ்த்துகள்'' என்று பதிவிட்டுள்ளார். கவினின் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன. 

2018 TopTamilNews. All rights reserved.