“அந்த இடத்தில் உங்கள் புன்னகை பொழியும் பொன்னோவியம்” : வைரமுத்து நெகிழ்ச்சி!

 

“அந்த இடத்தில் உங்கள் புன்னகை பொழியும்  பொன்னோவியம்” : வைரமுத்து நெகிழ்ச்சி!

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மதியம் 12.45 மணிக்கு சென்னை வருகிறார். குடியரசு தலைவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் அமைச்சர்கள் ,உயர் அதிகாரிகள் வரவேற்க உள்ளனர். அங்கிருந்து கிண்டி ராஜ்பவன் செல்லும் குடியரசுத் தலைவர் அங்கு ஓய்வு எடுத்து விட்டு மாலை 4.30 மணிக்கு சட்டமன்றம் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அந்த இடத்தில் உங்கள் புன்னகை பொழியும்  பொன்னோவியம்” : வைரமுத்து நெகிழ்ச்சி!

சபாநாயகர் வரவேற்புரையை ஆற்ற, ஆளுநர் தலைமை தாங்கி, முதலமைச்சர் முன்னிலை தாங்குகிறார். படத்திறப்பு விழாவையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை விழா கோலம் பூண்டுள்ளது. கொரோனா பரவலுக்கு இடையே நிகழ்ச்சி நடைபெறுவதால் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் ,முன்னாள் சபாநாயகர் ,சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட ஒரு சில உயர் அதிகாரிகள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

“முத்தமிழறிஞரே!

எந்த இடம்
உங்கள் பொதுவாழ்வில்
புகழ் பூத்த இடமோ

எந்த இடம்
இனத்திற்கும் மொழிக்கும்
புகழ் சேர்த்த இடமோ

அந்த இடத்தில்
உங்கள்
புன்னகை பொழியும்
பொன்னோவியம்

உங்கள்
திருவுருவம் திறந்துவைக்கும்
குடியரசுத் தலைவருக்கும்
திறக்கச் செய்யும்
முதலமைச்சருக்கும்
நன்றி ” என்று பதிவிட்டுள்ளார்.