‘இது வேலைக்கு ஆகாது’..பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்து கஸ்தூரி பகீர் ட்வீட்!

 

‘இது வேலைக்கு ஆகாது’..பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்து கஸ்தூரி பகீர் ட்வீட்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் இன்று மதியம் வெளியானது. அதிமுக பாஜகவுக்கு ஒதுக்கிய 20 தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் 3 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என பாஜக தலைமை சொல்லியிருக்கிறது.

‘இது வேலைக்கு ஆகாது’..பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்து கஸ்தூரி பகீர் ட்வீட்!

பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளுள், 14 தொகுதிகளில் திமுகவுடன் நேரடி போட்டி நிலவுகிறது. அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்ட தமிழக பாஜக தலைவர், திட்டத்தை வகுக்க டெல்லிக்கே சென்று விட்டார். 2 நாட்களாக டெல்லியில் நடந்த தீவிர ஆலோசனைக்கு பிறகு தான் இந்த பட்டியல் வெளியானது. அதில் தாராபுரத்தில் எல்.முருகன், காரைக்குடியில் ஹெச் ராஜா அரவக்குறிச்சியில் அண்ணாமலை கோவை தெற்கில் வானதி ஸ்ரீனிவாசன் ஆயிரம்விளக்கில் குஷ்பு போட்டியிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

‘இது வேலைக்கு ஆகாது’..பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்து கஸ்தூரி பகீர் ட்வீட்!

பாஜகவில் ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கும் சூழலில், நடிகை குஷ்புவை தவிர வேறு யாருக்குமே வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஏன்.. ராஜபாளையம் தொகுதி கிடைக்குமென 5 மாதமாக கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த நடிகை கவுதமியின் பெயர் கூட பட்டியலில் இடம்பெற்றிருக்கவில்லை. இத்தனை நாட்களாக இழுபறியில் இருந்த பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகும், பலருக்கு அதிருப்தியை மிஞ்சியிருக்கிறது.

‘இது வேலைக்கு ஆகாது’..பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்து கஸ்தூரி பகீர் ட்வீட்!

இந்த நிலையில், பாஜகவின் வேட்பாளர் பட்டியலை விமர்சித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பே தன்னை எதிர்த்து போட்டியிடுபவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு பாஜகவுக்கு இருந்தது. அப்படி இருப்பினும், இந்த வேட்பாளர் பட்டியல் அதிர்ச்சி அளிக்கிறது. குழப்பமாகவும் அபத்தமாகவும் இருக்கிறது. தேர்வு செய்யப்பட்டவர்கள் வேலைக்கு ஆக மாட்டார்கள். மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தமிழகத்தில் தங்கள் சொந்த சாதனையை முறியடிக்க பாஜக முயற்சிப்பது போல தெரிகிறது என பதிவிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவு பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.