• December
    16
    Monday

Main Area

Main



பிக் பாஸ் விட்டில் கஸ்தூரியின் ஒரு நாள் சம்பளம் என்ன தெரியுமா? 

 கஸ்தூரி
கஸ்தூரி

சென்னை: பிக் பாஸ் விட்டில் கஸ்தூரியின் ஒரு நாள் சம்பளம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் தொடங்கி 52 நாளை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து 7 பேர் வெளியாகி ஒன்பது பேர்களுடன் போட்டி நகர்ந்து செல்கிறது. இதில் வைல்ட் கார்டு போட்டியாளராக யாரு நுழைவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. 

தற்போது சில நாட்களுக்கு முன்பு கஸ்தூரி வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அதனால் போட்டி சற்று விறுவிறுப்பாகச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது எதுவுமே பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கவில்லை. இவர் கடந்த இரண்டு சீசன்களவே வருவார் என்று ஒரு பேச்சு அடிப்பட்டு கொண்டு இருந்தது. 

 கஸ்தூரி

அதே போல் தான் மூன்றாவது சீசன் தொடக்கத்தில் இவரின் பெயர் அடிபட்டது. ஆனால் அது அனைத்துமே கட்டுக்கதை என்று அதை மறுத்துவிட்டார். அப்படி கூறியிருந்த அவர் திடீரென்று பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படி சென்றார் என்று அனைவரும் குழம்பினார். அதற்கான விடை தற்போது தெரியவந்துள்ளது. ஆம்.... இதில் அவர் பங்குகொள்வதற்காக ஒரு நாளுக்கு ஒரு லட்சம் சம்பளம் வழங்குவதாக பிக் பாஸ் குழு அறிவித்தார்களாம். அதனால் அவர் இந்த முறை சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.