darbar
  • January
    22
    Wednesday

Main Area

Main



பிரபலமான காசி விஸ்வநாத் கோயிலில் சாமியை தொட்டு கும்பிடணுமா?...... அப்பம் ஜீன்ஸ், டி-சர்ட் போட்டு உள்ளே போகாதீங்க

காசி விஸ்வநாத் கோயில்
காசி விஸ்வநாத் கோயில்

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரபலமான காசி விஸ்வநாத் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருவர். மற்ற கோயில்களில் போல் இல்லாமல் இந்த கோயிலில் தொடு தரிசன நேரத்தில் பக்தர்கள் கருவறைக்குள் சென்று அங்கு உள்ள ஜோதிர்லிங்கத்தை தொட்டு வணங்கலாம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் எந்தவிதமான ஆடைகள் அணிந்து வந்தாலும் கருவறைக்குள் நுழைந்து ஜோதிர்லிங்கத்தை தொட்டு வணங்க அனுமதிக்கப்பட்டனர்.

ஜோதிர் லிங்கா

பக்தர்கள் சிலர் அணிந்து வரும் ஆடை பல்வேறு விமர்சனங்களை எழுப்பியதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை  உத்தர பிரதேச சுற்றுலா துறை அமைச்சா் நீல்காந்த் திவாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோயில் நிர்வாகத்தினர் காசி வித்வத் பரிஷத் அமைப்புடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், கோயிலில் தொடு தரிசன நேரத்தில் பக்தர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடு விதிக்க முடிவு எடுக்கப்பட்டது. 

சேலை அணிந்த பெண்கள்

ஆண் பக்தர்கள் வேஷ்டி மற்றும் குர்தாவும், பெண் பக்தர்கள்  சேலை அணிந்திருந்தால் மட்டுமே தொடு தரிசன நேரத்தில் கோயில் கருவறைக்குள்  சென்று ஜோதிர்லிங்கத்தை தொட்டு அனுமதிக்க வேண்டும் என்றும் மற்ற உடைகள் அணிந்த பக்தர்களை கருவறைக்குள் அனுமதிக்க கூடாது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கான புதிய ஆடை விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வரும் தகவல் வெளியாகியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.