“சிக்கன் 65 ஒருபுறம்…குத்தாட்டம் மறுபுறம்” : வேட்பாளர்களின் அட்ராசிட்டி!!

 

“சிக்கன் 65 ஒருபுறம்…குத்தாட்டம் மறுபுறம்” : வேட்பாளர்களின் அட்ராசிட்டி!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன் தமிழக அரசியல் களத்தில் பல வேடிக்கையான நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. பரம விரோதிகளாக இருந்த கட்சிகள் பரஸ்பரம் செய்து கொள்வது, ஒரே கூட்டணியில் இருந்தவர்கள் பிரிந்து சென்று சகட்டு ,மேனிக்கு திட்டிக்கொள்வது எல்லாம் அரசியலில் வழக்கமான ஒன்று தான்.அதேபோல் வாக்கு சேகரிப்பிலும் பல காமெடி கட்சிகள் அரங்கேறுகின்றன. வேட்பாளர் துணி துவைத்து கொடுப்பது, டீக்கடையில் டீ போடுவது, தோசை மாஸ்டராக மாறுவது பல விநோதங்கள் நடக்கின்றன.

அந்த வகையில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் கரூர் தொகுதி வேட்பாளராக கஸ்தூரி தங்கராஜ் களமிறக்கப்பட்டுள்ளார் . முன்னாள் மாவட்ட கவுன்சிலரான இவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் கரூர் வடிவேல் நகர், ரெட்டிபாளையம், வேலுச்சாமிபுரம் ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வந்த இவர் அங்குள்ள முதியவர்களின் காலில் விழுந்து தனக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

“சிக்கன் 65 ஒருபுறம்…குத்தாட்டம் மறுபுறம்” : வேட்பாளர்களின் அட்ராசிட்டி!!

இதை தொடர்ந்து பிரியாணி கடை ஒன்றில் சிக்கன் 65 செய்து கொண்டிருந்த பெண்ணிடம் வாக்கு சேகரித்த அவர், அவரிடமிருந்து சிக்கனை வாங்கி எண்ணெய்யில் போடு பொரித்து எடுத்தார்.
இதையடுத்து பொரித்த சிக்கன் துண்டுகளை பொதுமக்களுக்கு பரிமாறிய அவர் அதே சமயத்தில் தனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

“சிக்கன் 65 ஒருபுறம்…குத்தாட்டம் மறுபுறம்” : வேட்பாளர்களின் அட்ராசிட்டி!!

இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தேவராஜ் ‘ஸ்டாலின்தான் வராரு விடியல் தர போறாரு’ என்ற பாடலுக்கு உற்சாக நடனமாடி வாக்கு சேகரித்தார்.