“நேற்று முதல்வர்… இன்று கலெக்டர்” – அதிரடி ரெய்டுகளால் அலறும் அரசு ஊழியர்கள்!

“நேற்று முதல்வர்… இன்று கலெக்டர்” – அதிரடி ரெய்டுகளால் அலறும் அரசு ஊழியர்கள்!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் இரண்டாம் தவணைக்கான 2,000 ரூபாய் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனுடன் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் முதல்வன் பட பாணியில் களத்தில் இறங்கினார் முதல்வர் ஸ்டாலின். சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் இயங்கி வரும் நியாயவிலைக் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

“நேற்று முதல்வர்… இன்று கலெக்டர்” – அதிரடி ரெய்டுகளால் அலறும் அரசு ஊழியர்கள்!

ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வரும் கொரோனா நிவாரண தொகை, 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களின் தொகுப்பு உள்ளிட்டவை சரியாக வழங்கப்படுகிறதா என்று அங்கிருந்த மக்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். மேலும் மக்களுக்கு அவற்றை வழங்கினார். நேற்று தமிழ்நாட்டின் ஹாட் நியூஸாக மாறியது. தற்போது அதே பாணியில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஜவஹர் பஜாரில் அருகே உள்ள ரேஷன் கடையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

“நேற்று முதல்வர்… இன்று கலெக்டர்” – அதிரடி ரெய்டுகளால் அலறும் அரசு ஊழியர்கள்!

அவர் வரும் வரை மக்களுக்கு பொருட்களை வழங்கவில்லை. இதைக் கண்டு அதிர்ந்துபோன அவர், எதற்காக மக்களைக் காக்க வைத்திருந்தீர்கள் என விற்பனையாளரிடம் கடிந்துகொண்டார். அதோடு நில்லாமல் தாமதத்திற்கு மக்களிடம் மன்னிப்பும் கேட்டார்.

“நேற்று முதல்வர்… இன்று கலெக்டர்” – அதிரடி ரெய்டுகளால் அலறும் அரசு ஊழியர்கள்!

டோக்கன்கள் முறையாக விநியோகம் செய்யப்பட்டதா? ரேஷன் கடைகளில் மரியாதையாக நடத்துகிறார்களா உள்ளிட்டவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் அதிரடி ரெய்டுகாள் அரசு ஊழியர்கள் கதிகலங்கியுள்ளனர். அதேசமயம் இதுபோன்ற ரெய்டுகள் தான் சரியாக வேலை நடக்க உதவும் என மக்கள் கூறியுள்ளனர்.