கறுப்பர் கூட்டம் – குண்டர் சட்டம் ரத்து!

 

கறுப்பர் கூட்டம் – குண்டர் சட்டம் ரத்து!

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கறுப்பர் கூட்டம் – குண்டர் சட்டம் ரத்து!

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் முருக கடவுளின் கந்த சஷ்டி கவசம் அவதூறாக ஒளிபரப்பப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டு அதிலுள்ள வீடியோக்கள் அழிக்கப்பட்டன. இந்த விவகாரம் விஸ்வரூபமான நிலையில் சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கறுப்பர் கூட்டம் – குண்டர் சட்டம் ரத்து!

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுரேந்திரன் மனைவி கீர்த்திகா, செந்தில்வாசன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.