‘திமுகவுடன் கருணாஸ்’ உதயசூரியன் சின்னத்தில் போட்டி?

 

‘திமுகவுடன் கருணாஸ்’ உதயசூரியன் சின்னத்தில் போட்டி?

சட்டமன்ற தேர்தலில் கூட்டணியமைக்க திமுகவுடன் கருணாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘திமுகவுடன் கருணாஸ்’ உதயசூரியன் சின்னத்தில் போட்டி?

எம்எல்ஏ கருணாஸ் இன்று சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, மதுரை விமனநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்காமல் அதிமுக அரசு ஏமாற்றிவிட்டது. எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார்; அதனால் அதிமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இனி அதிமுக செய்த துரோகத்தை முன்னிறுத்தி 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வோம். எங்கள் கோரிக்கைகளை அதிமுக நிறைவேற்றாததால், தமிழகத்தில் 84 தொகுதிகளில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தனித்து போட்டியிடும். சீட்டு கேட்கும் அளவிற்கு மானம்கெட்டுப் போகவில்லை. சசிகலாவுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன். குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சொந்தமான அமைப்பாக கட்சியை மாற்றிவிட்டார் எடப்பாடி” என்றார்.

‘திமுகவுடன் கருணாஸ்’ உதயசூரியன் சின்னத்தில் போட்டி?

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள கருணாஸ் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த முறை திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாஸ். கடந்த முறை தேர்தலில் திமுக வேட்பாளரை வென்ற கருணாஸ் ஈபிஎஸ் – ஓபிஎஸ் உடன் இணக்கமான உறவில் இருந்தார். இந்த சூழலில் கருணாஸை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக அழைக்காத நிலையில் அவர் திமுக பக்கம் சாய்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.