‘ஒரேநாளில் பின்வாங்கும் கருணாஸ்’ : திமுக ஆதரவு திரும்ப பெறப்படுமா?

 

‘ஒரேநாளில் பின்வாங்கும் கருணாஸ்’ : திமுக ஆதரவு திரும்ப பெறப்படுமா?

கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று கூடுகிறது.

‘ஒரேநாளில் பின்வாங்கும் கருணாஸ்’ : திமுக ஆதரவு திரும்ப பெறப்படுமா?

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த கருணாஸ் திமுகவுக்கு ஆதரவு அளித்தார். கடந்த முறை திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாஸ் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க அதிமுக அழைக்கும் என காத்துக்கிடந்தார். கடந்த முறை தேர்தலில் திமுக வேட்பாளரை வென்ற கருணாஸ் ஈபிஎஸ் – ஓபிஎஸ் உடன் இணக்கமான உறவில் இருந்த நிலையில், சசிகலாவை ஆதரித்தும் பேசி வந்தார்.

‘ஒரேநாளில் பின்வாங்கும் கருணாஸ்’ : திமுக ஆதரவு திரும்ப பெறப்படுமா?

இந்த சூழலில் அதிமுகவில் சசிகலா என்னை அறிமுகப்படுத்திய காரணத்தினால் புறம்தள்ளி விட்டனர். எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார். கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என்றார்.அத்துடன் நேற்று கருணாஸ் , சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக கடிதம் மூலம் தலைமை கழகத்திற்கு உறுதி செய்தார்.இந்நிலையில் திமுக கூட்டணிக்கு கருணாஸ் கட்சி ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்த நிலையில் இன்று திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படையின் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கும் நிலையில் நிர்வாக குழு கூட்டத்திற்கு பின் அரசியல் செயல்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்று எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்

. நேற்று வெளிப்படையாக ஆதரவு அளித்த கருணாஸ் இன்று ஏன் இந்த திடீர் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கட்சி நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். திமுக கூட்டணிக்கு தமிமுன் அன்சாரி எம்எல்ஏ ,அரசின் நிலைப்பாடு , யாருக்கு ஆதரவு என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கிறார்.