Home தமிழகம் “பாமகவுக்கு மட்டும் இடஒதுக்கப்பட்டால் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் சமூகமும் போராட்டத்தில் குதிக்கும்”

“பாமகவுக்கு மட்டும் இடஒதுக்கப்பட்டால் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் சமூகமும் போராட்டத்தில் குதிக்கும்”

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், “அரசியல் சுயநலத்திற்காக யாராவது ஒரு சமுதாயத்திற்கு தனியாக இந்த அரசு ஏதாவது இட ஒதுக்கீடு அறிவிக்குமேயானால் தமிழகத்தில் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமும் நான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயமும் இணைந்து தமிழகம் காணாத ஒரு போராட்டத்தை காண நேரிடும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. எம்ஜிஆர் வழியில் எண்ணற்ற ஏழை, எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செய்து எங்களை போன்ற அடையாளம் தெரியாதவர்களுக்கெல்லாம் பல உயர்ந்த பதவிகள் வழங்கி மக்களால் நான் மக்களுக்காகவே நான் என கடைசி வரை மக்கள் பணியாற்றிய தியாகத் தலைவிக்கு இப்பேர்ப்பட்ட ஒரு விழா என்பது ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமல்ல இந்தியாவும் வரவேற்கக் கூடிய ஒரு செய்தி.

“பாமகவுக்கு மட்டும் இடஒதுக்கப்பட்டால் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் சமூகமும் போராட்டத்தில் குதிக்கும்”
“பாமகவுக்கு மட்டும் இடஒதுக்கப்பட்டால் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் சமூகமும் போராட்டத்தில் குதிக்கும்”

மக்கள் பிரச்சினையை தீர்ப்பேன் என கூறுவது எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் முக்குலத்தோர் புலிப்படை வரவேற்கும். சசிகலா தற்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ளார் அவர் வீடு திரும்பியதும் அவரை சந்திக்க நேரம் கேட்போம், எங்களுக்கு நேரம் ஒதுக்கும் பட்சத்தில் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து உடல் குறித்து முக்குலத்தோர் புலிப்படை சார்பில் விசாரிப்போம். வரும் சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை அதிமுகவுடன் கூட்டணியா? இல்லை அமமுகவுடன் கூட்டணியா? என இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை. தற்போது வரை நாங்கள் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பரப்புரையில் உள்ளதால் அவரை சந்திக்க எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

தற்போது கூட்டணி நடைபெற்றுக் கொண்டுள்ளது. சில கட்சிகள் கூட்டணியை துவக்கி உள்ளனர். சில கட்சிகள் பேரங்களை ஆரம்பித்துள்ளனர். மக்கள் அதை பார்த்துக்கொண்டு தான் உள்ளார்கள். அது சொல்லக்கூடிய காரணம் வேறாக இருந்தாலும் இயக்கங்களில் நடக்கக்கூடிய பேரங்களை அறிவு சார்ந்த மக்கள் உணர்ந்து கொண்டுதான் உள்ளார்கள். அது எல்லாம் முடிந்த பிறகு வெளிப்படையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி கட்சிகளையும் எங்களைப் போன்ற இயக்கங்களையும் அழைத்து பேசினால் தான் கூட்டணி முடிவாகும்.

அரசியல் எனக்கு தொழில் கிடையாது, அரசியலை வைத்து வியாபாரம் செய்யக்கூடிய கீழ்தரமான சிந்தனையும் எனக்கு கிடையாது. ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுமேயானால் அதிகமாக இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” எனக் கூறினார்.

“பாமகவுக்கு மட்டும் இடஒதுக்கப்பட்டால் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் சமூகமும் போராட்டத்தில் குதிக்கும்”
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மோடி அரசே! என்னை கைது செய் – நடிகை ஓவியா சவால்

இந்தியா முழுவதுமே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சூழலில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடுவது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நாடு முழுவதும்...

மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்?… எங்கே அந்த 65 உடல்கள்? – வெளியான அதிர்ச்சி தகவல்!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மகா கும்பமேளாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். அதன் பிறகே அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. ஆனால் அரசு வெளியிடும்...

வங்கிகளின் வேலை நேரம் மேலும் குறைப்பு

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வரும் நிலையில் வங்கிகள் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்...

ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படுமா? – அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்

கொரோனா தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது....
- Advertisment -
TopTamilNews