வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினால் முக்குலத்தோருக்கு 25% வழங்கவேண்டும்- கருணாஸ்

 

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினால் முக்குலத்தோருக்கு 25% வழங்கவேண்டும்- கருணாஸ்

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை 1987 முதலே பாமக கேட்டு வருகிறது. எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்தக் கோரிக்கை பரிசீலிக்கவில்லை. சமீபத்தில் கூட பாமக இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் அறிவித்தது. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக சார்பில் தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட, மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டமும் நடைபெற்றது. இதுதொடர்பாக பாமக தலைவர்கள் முதல்வரிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினால் முக்குலத்தோருக்கு 25% வழங்கவேண்டும்- கருணாஸ்

இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர் கருணாஸ், “வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால் மூத்த குடியான தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கடந்த முறை ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற எங்களுக்கு தற்போது இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும் என்று கேட்போம். சின்னம்மா சசிகலா அவர்கள் 27ஆம் தேதி விடுதலை ஆக இருப்பதை எங்கள் சமூகம் மட்டுமல்லாது, உண்மையான அதிமுகவினரும் வரவேற்பார்கள், அவரை பிடித்தவர்கள் அவரோடு செல்வார்கள். கட்சியில் சலசலப்பு ஆகுமா என்ற யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை” எனக் கூறினார்.