முத்துராமலிங்க தேவரை இழிவுப்படுத்திய ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்- கருணாஸ்

 

முத்துராமலிங்க தேவரை இழிவுப்படுத்திய ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்- கருணாஸ்

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், “ கடந்த 30 ஆம் தேதியன்று நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திருநீரை பூச மறுத்தது கண்டனத்துக்கு உரியது. அதற்கு வருத்தம் தெரிவித்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டாம். ஒன்று நார்த்தீகராக அல்லது ஆர்த்தீகராக இருக்க வேண்டும். முத்துராமலிங்க தேவரை இழிவுப்படுத்தி விட்டார். தேவர் சமூகத்தின் உணர்வுகளை ஸ்டாலின் புரிந்துக் கொள்ள வேண்டும்.

முத்துராமலிங்க தேவரை இழிவுப்படுத்திய ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்- கருணாஸ்

வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் முக்குலத்தோர் சார்பில் தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தப்படும். சசிகலாவிற்கு அரணாக இருப்போம். அவர் வந்தவுடன் சென்று சந்திப்பேன். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர், வன்னியர் சமூகத்திற்கு உள்ளது போல தங்கள் சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை எந்த கட்சி ஏற்கிறதோ அந்த கட்சியிடம் அரசியல் கூட்டணி அமையலாம். தேர்தல் நேரத்தில் கூடுதல் இடங்கள் கேட்கப்படும். பொது தளத்தில் அரசியல் கட்சியினர் ஒருமையில் பேசுவது மிக மிக தவறானது” எனக்கூறினார்.