• August
    19
    Monday

Main Area

karunanidhi statue
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்னை வருகை! 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வருகிறார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையானது அவரது நினைவு தினமாக ஆகஸ்ட் 8 ஆம் தேதி நாளை திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வருகிறார். இந்த விழாவிற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். நாளை மாலை 5 மணிக்கு இந்த சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.

kARUNANITHI

இதில், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். முரசொலி செல்வம் வரவேற்கிறார். சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிறகு மாலை 5.30 மணியளவில் சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. 
 

aishwarya Tue, 08/06/2019 - 19:06
Mamata Banerjee karunanidhi statue dmk mamata banerjee அரசியல்

English Title

Mamata to inaugurate Karunanidhi statue

News Order

0

Ticker

1 ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackSonia... பழிக்கு பழி தீர்க்கும் தமிழக பாஜக!

சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வரும் சோனியாகாந்திக்கு எதிராக தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் #GoBackSonia என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

மறைந்த திமுக முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சிலையை திறந்து வைக்கிறார். அதன் பிறகு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. அதில் கேரள முதல்வர் பினராயி  விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.விழாவில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியும், காங் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் விமானம் மூலம் இன்று பிற்பகல் சென்னை வருகின்றனர்.

trending

இந்நிலையில், சோனியா காந்தியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் #GoBackSonia என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். முன்னதாக பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் தமிழகம் வந்தபோது, #GoBackModi, #GoBackAmitshah என்ற ஹேஷ்டேக்குகளை நெட்டிசன்கள் உலக அளவில் ட்ரெண்டாக்கினர். தற்போது அதற்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 

vikrammuthu Sun, 12/16/2018 - 13:19
go back sonia sonia gandhi karunanidhi statue ganhi அரசியல்

English Title

#GoBackSonia is trending in twitter கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை... பரபரப்பான பின்னணி தகவல்கள்

சென்னை: கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த திமுக முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சிலையை திறந்து வைக்கிறார். அதன் பிறகு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. அதில் கேரள முதல்வர் பினராயி  விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இதற்கிடையே இந்த விழாவில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்ய கட்சித்தலைவர் கமல்ஹாசன், மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள போவதாக ஏற்கனவே ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில்,  கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்வதால் விழாவில் பங்கேற்க முடியவில்லை என்றார்.

ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக-காங்கிரஸூடன் கூட்டணி வைக்கப்போகிறது. அதனை இன்று மாலை திமுகவோ, காங்கிரசோ பொதுக்கூட்டத்தில் வெளியிடும் என தகவல்கள் வெளியாகின. எனவே தற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இன்றைய கூட்டத்தை கமல் புறக்கணித்தார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

vikrammuthu Sun, 12/16/2018 - 11:38
makkal needhi maiam kamalhassan karunanidhi statue kamal அரசியல்

English Title

kamal not participate in karunanidhi statue open function கருணாநிதி சிலை திறப்பு விழா: பங்கேற்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது. அதன்படி அங்கு இருந்த அண்ணா சிலை சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டு, அந்த சிலையை புனரமைக்கும் வேலை நடந்து வந்தது.

புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கருணாநிதி சிலையும் அண்ணா அறிவாலயத்தில் ஒரே இடத்தில், நாளை திறக்கப்படும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர்கள்  கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைப்பார்கள் என திமுக தெரிவித்தது. இந்நிலையில், கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திறப்பு விழாவில் பங்கேற்க சென்னைக்கு வரும் சோனியா காந்தி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் என்றும்  இதனை அடுத்து காங்கிரஸ்- திமுக கூட்டணி குறித்து பேசவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

manikkodimohan Sat, 12/15/2018 - 10:25
anna arivalayam karunanidhi statue sonia gandhi rajinikanth POLITICAL rajinikanth அரசியல்

English Title

rajini likely to be participate in the opening ceremony of karunanidhi statue கருணாநிதி சிலை திறப்பு விழா; ஆர்ப்பரிக்கும் கடலென கூடுக: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவை அடுத்து ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆர்ப்பரிக்கும் கடலென கூட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்று, இந்திய அரசியலின் வழிகாட்டியாக விளங்கிய வரலாற்று நாயகர் நம் தலைவருக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.

பல மாநிலங்களிலிருந்தும் வரும் தலைவர்களுடன் தமிழ்நாட்டில் நம் தோழமைக் கட்சியின் தலைவர்கள்- நிர்வாகிகள், பல்வேறு கட்சி அமைப்புகளின் தலைவர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையினர், பல துறை அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள் என கலைஞரின் மீது பேரன்பு கொண்ட பலரும் பங்கேற்கிறார்கள்.

அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழாவில், இடவசதி கருதி அதிகம் பேர் பங்கேற்க இயலாது என்பதால்தான், டிசம்பர் 16 மாலை 5 மணிக்கு சிலை திறப்பு விழா நடைபெற்றதும், தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற இருக்கிறது.

கழகத்தின் தொண்டர்களாம் கலைஞரின் உடன் பிறப்புகள் யாவரும் ஆர்வ மிகுதியால் அறிவாலயம் முன்பு கூடுவதைத் தவிர்த்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் அணிஅணியாய்த் திரள வேண்டும் என உங்களில் ஒருவனான நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கலைஞர் நமக்கு வகுத்தளித்த கட்டுப்பாட்டு உணர்வினைக் காத்திட வேண்டும்.

இது நம் வீட்டு விழா. நம் குடும்ப விழா. விருந்தினரை வரவேற்று அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே, கட்டுப்பாடு காப்போம்.

அறிவாலயத்தில் கூடுவதைத் தவிர்த்து, ஆர்ப்பரிக்கும் கடலென ராயப்பேட்டை அரங்கில் கூடிடுவோம். கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா சிறப்புற நிகழ்ந்த பிறகு, மாவட்ட வாரியாக ஒவ்வொரு நாளும் நம் உயிர்நிகர்த் தலைவரை சிலையில் காண்போம். இதயம் குளிர்வோம்.

சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றுகின்ற உரை, கலைஞர் கட்டிக்காத்த மதசார்பற்ற, முற்போக்கு, சமூகநீதி ஜனநாயகக் கொள்கைகளின் முழக்கமாக அமையும். அது இந்தியா எதிர்கொள்ளப்போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கும் தமிழ்நாடு காணவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் நமக்கான வெற்றிப் பாதையை சுட்டிக்காட்டும்.

அந்த வெற்றியை நம்மைவிட அதிகமாக நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கழகத்தின் வெற்றி என்பது கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு விட்டது. அதனை எடுத்துப் பதிக்கின்ற பணிதான் தேர்தல் களம். அதற்கேற்ப பொறுப்புணர்ந்து கட்டுப்பாடு காத்து ஓயாது உழைத்திட வேண்டும். அதுவே திருவுருவச்சிலையாக உயர்ந்து நிற்கும் கலைஞருக்கு நாம் செய்யும் தொண்டு காட்டுகின்ற நன்றி செலுத்துகின்ற காணிக்கை என கூறியுள்ளார்.

vikrammuthu Fri, 12/14/2018 - 16:28
mk stalin karunanidhi statue stalin அரசியல்

English Title

mk stalin invites party members to karunanidhi statue open கருணாநிதி சிலை திறப்பு விழா; கெஜ்ரிவாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா வரும் 16-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சிலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் திறக்கப்பட இருக்கிறது. மேலும், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர். மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்தித்து விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி வருகிறார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்த மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் அவர் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.

vikrammuthu Mon, 12/10/2018 - 12:55
karunanidhi statue mkstalin aravind kejriwal kejrival இந்தியா

English Title

Mk stalin meets aravind kejriwal சரத்பவாரை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார்.

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா வரும் 16-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சிலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் திறக்கப்பட இருக்கிறது. மேலும், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர். விழாவிற்கான அழைப்பிதழை நேற்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து ஸ்டாலின் வழங்கினார். அத்துடன் டெல்லியில் இன்று நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

இந்நிலையில், இன்று காலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, சென்னையில் நடைபெறும் அண்ணா, கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்து அதற்கான அழைப்பிதழை வழங்கினார். இந்த சந்திப்பின் போது திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உடனிருந்தார்.

vikrammuthu Mon, 12/10/2018 - 12:33
mk stalin sarath bhavar karunanidhi statue stalinn அரசியல்

English Title

Mk stalin meets sarath bhavar கருணாநிதி சிலை டிசம்பரில் திறப்பு

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை டிசம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து அவருக்கு திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே சிலை வைக்க முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக 8 அடி உயர கருணாநிதியின் சிலையை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சிற்பி தீனதயாளன் உருவாக்கி இருக்கிறார். இதற்காக அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கருணாநிதியின் சிலையோடு புனரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் சிலையும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

admin Thu, 11/15/2018 - 11:46
karunanidhi statue kalaignar dmk kalaignar karunanidhi karunanidhi அரசியல்

English Title

Karunandihi statue open at december 16
2018 TopTamilNews. All rights reserved.