கருணாநிதி படத்திறப்பு விழாவை புறக்கணிக்கிறோம் : ஜெயக்குமார் பேட்டி!

கருணாநிதி படத்திறப்பு விழாவை புறக்கணிக்கிறோம் : ஜெயக்குமார் பேட்டி!

சட்டமன்ற வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.

கருணாநிதி படத்திறப்பு விழாவை புறக்கணிக்கிறோம் : ஜெயக்குமார் பேட்டி!

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். அதன்படி இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐந்து நாள் பயணமாக சென்னை வருகிறார். இதனால் சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருணாநிதி படத்திறப்பு விழாவை புறக்கணிக்கிறோம் : ஜெயக்குமார் பேட்டி!

படத் திறப்பு விழாவையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை விழா கோலம் பூண்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக எம்எல்ஏக்கள் ,முன்னாள் சபாநாயகர்கள், சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் .டிஜிபி உள்ளிட்ட ஒரு சில உயர் அதிகாரிகள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி படத்திறப்பு விழாவை புறக்கணிக்கிறோம் : ஜெயக்குமார் பேட்டி!

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சட்டப்பேரவையில் நடக்கும் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கிறது. சட்டமன்ற வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுகிறது. சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத் திறப்பு விழாவை திமுகவினர் புறக்கணித்தனர். அப்படி இருக்கும்போது கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு நாங்கள் எப்படி வரமுடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.