தோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு !

 

தோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு !

இன்று கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள். அவர்களை இந்நாளில் வழிபட தோஷங்கள் விலகும் சந்தோஷங்கள் பெருகும். கருடன் விஷ்ணுவின் வாகனமாகவும் பாம்பு சிவனின் ஆபரணமாகவும் விளங்குகிறது. எல்லா பெருமாள் கோயில்களிலும், பெருமாள் சந்நிதிக்கு எதிரே, பெருமாளை நோக்கி கைக்கூப்பி நிற்கும் கருடாழ்வாரைத் தரிசிக்கலாம்.

 

தோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு !

பறவைகளில் கருடன் தான், ராஜபட்சி. அதாவது பறவைகளின் தலைவன். அப்பேர்ப்பட்ட பறவைகளின் ராஜாவான கருடன், ஆழ்வார் எனும் பெருமைமிகு சொல்லைப் பெற்றுக்கொண்டு, பெரிய திருவடியாக, கருடாழ்வாராக ஆலயங்களில் காட்சி தருகிறார்.

தோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு !

 

மாதந்தோறும் வளர்பிறை பஞ்சமி திதி நாளிலும் சுவாதி நட்சத்திர நாளிலும் கருடாழ்வாரை வழிபடுவது கூடுதல் பலன்களை தரும் வாழ்வில் வளம் சேர்க்கும்.

கருடாழ்வாரை கோவிலிலும், வீட்டிலும் தினம்தோறும் வணங்குவதால்  நாக தோஷம் நீங்கும். திருமணமான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அறிவும், ஆற்றலும் பெற்று, பொறுமை, வீரம், சமயோசித சாமர்த்தியம் உள்ளவர்களாக விளங்குவார்கள். தோல் நோய்கள் உட்பட தீராத நோய்கள் தீரும்.

தோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு !

ஆலயங்களில் கருடனை வழிபட்ட பின்னரே மூலவரை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். எந்த கோவிலில் கும்பாபிஷேகமாக இருந்தாலும் கருடன் வந்து வட்டமிட்டால் தான் அந்த கும்பாபிஷேகம் முழுமை பெறுகிறது.

நாம் வெளியே புறப்படும் நேரத்தில், கருடன் வலமிருந்து இடம் சென்றால், எடுத்த காரியம் வெற்றி அடையும் என்பது ஐதீகம். கருட தரிசன பலன்களை -ஞாயிறு -நோய் நீங்கும். திங்கள் – குடும்பம் செழிக்கும். செவ்வாய் – உடல் பலம் கூடும். புதன் – எதிரிகளின் தொல்லை நீங்கும். வியாழன்: நீண்ட  ஆயுளை  பெறலாம். வெள்ளி: லட்சுமி கடாட்சம் உண்டாகும். சனி: மோட்சம் கிடைக்கும்.

தோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு !

நாகர் அதாவது பாம்பு வழிபாடு என்பது நமது இந்துசமய வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே விளங்கிறது . சிவபெருமானுக்கு நாகாபரணன் என்ற ஒரு பெயர் உண்டு . காரணம் நாகப்பாம்புகளை அவர் ஆபரணமாக அணிந்திருப்பவர் . நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே உனக்கு நல்ல பெயர் வைத்தது யார் சொல்லு பாம்பே. ஆதிசிவன் மேலிருகும் ஆணவமா? அவன் அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா? என்று பாடுவர் திருநாவுக்கரசர் சுவாமிகள். இப்போதும் ஆலயங்களில் சிவலிங்கத்தின் மேல் நாகபரணம் சூடப்படுவதை காணலாம் . பல தலங்களில் சிவனின் திருநாமமே நாகநாதர் என்பது தான் . நாகர்களின் தலைவனாக போற்றப்படும் ஆதிசேஷன் சிவனை வழிபட்ட தலங்களில் எல்லாம் சிவன் நாகநாதராகவே வழிபடப்படுகிறார்.

தோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு !

அந்த திருதலங்களின் பெயர் கூட நாகர்கோயில் , திருபாம்புரம் , திருநாகேஸ்வரம், நாகப்பட்டிணம், நாகூர் என்று நாகம், பாம்பு என அதன் பெயரையொட்டியே அமைந்துள்ளன . சிவனுக்கு மட்டுமல்ல பெருமாளுக்கும் பாம்பு என்றால் பிரியம் தான் பாற்கடலில் அவர் பள்ளி கொண்டிருப்பதே பாம்பணையில்தான் . ஆதிசேஷன் என்ற பாம்பின் மீதே விஷ்ணுபரமாத்மா அனந்தசயனம் செய்துகொண்டுள்ளார். கிருஷ்ணர் களிங்கன் என்ற பாம்பை அடக்கி அதன் மீது நின்று நர்த்தனம் ஆடினார். சுவாமிகள் மட்டுமின்றி அம்பிகையும் கூட நாகங்கள் மீது அன்பு கொண்டவள் தான். அதனால் பெரும்பலான அம்மன் ஆலயங்களில் புற்றுடன் நாக வழிபாடு பிரசித்தி பெற்றதாகஉள்ளது. நாககன்னி, நாகத்தம்மன், நாகவல்லியம்மன் என்றெல்லாம் அம்மன் கொண்டாடுகிறார்கள். கருடனையும் நாகர்களையும் கருட பஞ்சமி நாகபஞ்சமி நாளில் வழிபட நலன் எல்லாம் சேரும் வாழ்வு வளம் பெறும்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி.