எஸ்.வி சேகர் கூறியதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: கரு.நாகராஜன் பேட்டி

 

எஸ்.வி சேகர் கூறியதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: கரு.நாகராஜன் பேட்டி

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளித்தும் முதல்வர் பழனிசாமியை விமர்சித்தும் எஸ்.வி சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் உங்கள் கட்சிக்கு அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் வையுங்கள் என்றும் கட்சிக்கொடியிலிருந்து அண்ணா படத்தை தூக்குங்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இதனால் கடுப்பான அமைச்சர் ஜெயக்குமார், எஸ்வி சேகரின் கருத்துக்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு, எஸ்.வி சேகர் நன்றி மறந்தவர் என்றும் பதிலடி கொடுத்திருந்தனர்.

எஸ்.வி சேகர் கூறியதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: கரு.நாகராஜன் பேட்டி

இந்த நிலையில் எஸ்வி சேகர் பேசியது குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, எஸ்வி சேகர் அவரது தனிப்பட்ட கருத்தை கூறியிருப்பதாகவும் அவர் கூறியதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எஸ்.வி சேகர் அவ்வாறு கூறி வெளியிட்ட வீடியோ அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.