“புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக குஷ்பூ பொது வெளியில் கருத்து தெரிவித்தது தவறு”

 

“புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக குஷ்பூ பொது வெளியில் கருத்து தெரிவித்தது தவறு”

புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக குஷ்பூ பொது வெளியில் கருத்து தெரிவித்தது தவறு என தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

“புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக குஷ்பூ பொது வெளியில் கருத்து தெரிவித்தது தவறு”

மத்திய இணை அமைச்சராக தமிழக பாஜக தலைவர்கள் எல். முருகன் பதவி ஏற்றதை தொடர்ந்து தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு 2 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது, அந்த குறை தற்போது நீங்கியுள்ளதாக தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையில் இளைஞர்கள் மற்றும் மகளிர் அதிகம் இடம்பெற்று இருப்பது மகிழ்ச்சியை தருகிறது என கூறினார். ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு ட்விட்டரில் கருத்து தெரிவித்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது குறித்து குஷ்புவுக்கு அதிருப்தி இருந்தால், அதை அவர் கட்சி தலைமையிடம் நேரடியாக தெரிவித்திருக்க வேண்டும் அதற்கு பதிலாக பொதுவெளியில் கருத்து தெரிவித்தது தவறு எனவும் இது தன்னுடைய கருத்து எனவும் கரு.நாகராஜன் தெரிவித்தார் .