கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி களம்காண வேண்டும்- கார்த்தி சிதம்பரம்

 

கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி களம்காண வேண்டும்- கார்த்தி சிதம்பரம்

பிரபல தொழில் அதிபரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான வசந்தகுமார் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி மரணமடைந்தார். அவரது.மறைவை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக இருக்கிறது. அத் தொகுதிக்கு பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்துவதற்காக ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்திருந்தார்.

கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி களம்காண வேண்டும்- கார்த்தி சிதம்பரம்

தற்போது கன்னியாகுமரி தொகுதிக்கான வேட்பாளர்கள் பற்றிய ஆலோசனைகளை அனைத்துக் கட்சிகளும் நடத்தி வருகின்றன. இதில் பா.ஜ.க. சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன், வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் வலிமையான வேட்பாளர் வேண்டுமென எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அறிவிக்கப்படவிருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும். இது அவரது / கட்சி / கூட்டணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்