கார்த்திகை தீப திருவிழா – மண் விளக்கு உற்பத்தி தீவிரம்

 

கார்த்திகை தீப திருவிழா – மண் விளக்கு உற்பத்தி தீவிரம்

ஈரோடு

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, ஈரோட்டில் மண் விளக்கு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வரும் 29ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்துக்களின் வீடுகள் மற்றும் கோவில்களில் ஆயிரக்கணக்கில் விளக்கு ஏற்றி வாழிபடுவது வழக்கம். இதற்கு பழைய விளக்குகளை பயன்படுத்த மாட்டார்கள் என்பதால், புதிய மண் விளக்குகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. இவ்விழா விற்பனைக்காக ஈரோட்டில் பச்சபாளி, கொல்லம்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண் விளக்கு உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கொல்லம்பாளளையம், ஊத்துக்குளி பகுதிகளில் உற்பத்தி செய்வோர் இடம்பெயர்ந்து சென்ற நிலையில், நடப்பாண்டு பச்சப்பாளியில் மட்டும் பரம்பரியமாக விளக்கு உற்பத்தி செய்யும் சிலர் இதில் ஈடுபட்டுள்ளனர்.

கார்த்திகை தீப திருவிழா – மண் விளக்கு உற்பத்தி தீவிரம்

மூலப்பொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், தொடர் மழை, பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் மண்ணை பதப்படுத்தி சக்கரத்தில் ஏற்ற முடியவில்லை என தெரிவித்துள்ள, விளக்கு உற்பத்தியாளர்கள், மழை இல்லாத நேரத்தில் மட்டுமே சிறிய அளவில் மண் விளக்கு உற்பத்தி செய்வதாக தெரிவித்துள்ளனர். மேலும், மூலப்பொருள், மின்சார கட்டணம், ஆள் கூலி அனைத்தும் உயர்ந்துவிட்ட நிலையில், பாரம்பரிய தொழில் என்பதால் விடாமல் செய்துவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.