kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


விஜய்க்கு மாஸ் கேங்க்ஸ்டர், அஜித்துக்கு காமெடி: பிரபல இயக்குநரின் பதிலால் கடுப்பான அஜித் ரசிகர்கள்!

vijayajith
vijayajith
Loading...

சென்னை: நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்கினால் காமெடி படம் இயக்குவேன் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான  பேட்ட படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் 80களில் பார்த்த ரஜினியை கார்த்திக் சுப்புராஜ் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். அதே சமயத்தில் பேட்ட திரைப்படம் சர்வதேச அளவில் வசூல் சாதனை படைத்தது.

karthik

இந்நிலையில் தனியார் இணையதள ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள கார்த்திக் சுப்புராஜிடம், விஜய், அஜித், கமல் ஆகியோரை வைத்து படம் இயக்கினால் என்ன ஜானரில் எடுப்பீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விஜய்யை வைத்து  மாஸ் கேங்க்ஸ்டர் படத்தையும், அஜித்தை வைத்து காமெடி படத்தையும், கமல் ஹாசனுக்கு வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை இயக்குவேன் என்று கூறியுள்ளார். 

 

கார்த்திக் சுப்புராஜ் அளித்த பதிலுக்கு, அஜித் ரசிகர்களோ விஜய்க்கு கேங்க்ஸ்டர் கதை அஜித்துக்கு மட்டும் காமெடி படமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

2018 TopTamilNews. All rights reserved.