“தமிழக காங்கிரஸ் கட்சியை புரிந்துகொண்ட கார்த்தி சிதம்பரம்”- ஜி.கே.வாசன் பேட்டி

 

“தமிழக காங்கிரஸ் கட்சியை புரிந்துகொண்ட கார்த்தி சிதம்பரம்”- ஜி.கே.வாசன் பேட்டி

திருச்சி

தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளதன் மூலம் அவர் கட்சியை நன்றாக புரிந்துவைத்துள்ளது தெரிவதாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் சட்டமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய வாசன், மாநில கூட்டணியில் முதன்மை கட்சி என்ற அடிப்படையில் அதிமுக அறிவித்த முதலமைச்சர் வேட்பாளரை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

“தமிழக காங்கிரஸ் கட்சியை புரிந்துகொண்ட கார்த்தி சிதம்பரம்”- ஜி.கே.வாசன் பேட்டி

மேலும்,சட்டமன்ற தேர்தலில் தமாகா தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் என்று தெரிவித்த வாசன், எத்தனை இடங்களில் போட்டி இடுவது என்பது குறித்து அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். இறுதியாக பேசிய வாசன், கொரோனா காலகட்டத்தில் தேர்தலை முறையாகவும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடத்த வேண்டிய கூடுதல் பொறுப்பு தேர்தல் ஆணையத்திற் உள்ளதாகவும், அதன்படி தேர்தலை ஒரு கட்டமாக நடத்துவதா?, அல்லது இரண்டு கட்டமாக நடத்துவதா? என்பதை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.