“முதல்வரின் இந்த அறிவிப்பு கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும்”

 

“முதல்வரின் இந்த அறிவிப்பு கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும்”

தமிழகத்தில் ஒருநாள் மட்டும் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கியிருப்பது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

“முதல்வரின் இந்த அறிவிப்பு கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும்”

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே.24 ஆம் தேதிக்கு பின் ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்தது. ஒரு வாரத்துக்கு கடைகள் ஏதும் இயங்காது என்பதால் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதே போல், மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு மட்டும் கட்டுப்பாடின்றி பேருந்துகளை இயக்குவது என்பது நகரப் பகுதிகளில் இருந்து ஊரகப் பகுதிகளுக்கு கொரோனாவை விரைவாக பரப்புவதற்கு வழி வகை செய்யும் என எச்சரித்துள்ள மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், முதலமைச்சர் அருட்கூர்ந்து இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.