மிக விரைவில் அதிமுக சசிகலா குடும்ப தலைமைக்கு சென்றுவிடும்: கார்த்திக் சிதம்பரம்

 

மிக விரைவில் அதிமுக சசிகலா குடும்ப தலைமைக்கு சென்றுவிடும்: கார்த்திக் சிதம்பரம்

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என அக். 7 ஆம் தேதி அக்கட்சி தலைமை அறிவித்தது. இதனிடையே சசிகலா விடுதலை என்ற செய்தியும் ஒருபக்கம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலையானால் அதிமுகவில் மாற்றங்கள் நிகழும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்துவருகின்றனர்.

மிக விரைவில் அதிமுக சசிகலா குடும்ப தலைமைக்கு சென்றுவிடும்: கார்த்திக் சிதம்பரம்

இந்நிலையில் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம், “இந்தியாவின் சாபக்கேடே ஜாதிதான். அதில் ஈடுபட்ட அதிகாரிகளின் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். மிக விரைவில் அதிமுக சசிகலா குடும்ப தலைமைக்கு சென்றுவிடும். தற்போதைய முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சரித்திர விபத்துக்களால் பதவிக்கு வந்தவர்கள், திமுக – காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. பாஜக இந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பாதகம் தான். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

மத்திய அரசுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த மாநில அரசால் நிலுவையில் உள்ள ஆயிரக்கணக்கான கோடி ஜிஎஸ்டி தொகையை வாங்க முடியவில்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த முறையீடும் செய்ய முடியாது” எனக் கூறினார்.