12 ஆம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் – கார்த்தி சிதம்பரம்

 

12 ஆம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் – கார்த்தி சிதம்பரம்

12 ஆம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும். நடத்தப்படவில்லை என்றால் கல்லூரிகளில் சேரும்போது பெரும் குளறுபடி ஏற்படும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

12 ஆம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் – கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை எம்.பி கார்த்தி, “மத்திய அரசை குறைகூற பல விஷயங்கள் உள்ளது. அதில் குறிப்பாக தடுப்பூசி விவகாரம். இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளை தவிர மற்ற நாட்டு தடுப்பூசிகளை அனுமதிக்காதது, தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என பல்வேறு விவகாரத்தில் தவறாக கையாண்டுள்ளது. தடுப்பூசி விவகாரத்தில் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே வஞ்சித்துள்ளது பா.ஜ.க அரசு. இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மத்திய அரசுதான் காரணம். திட்டமிடல்,கொள்முதல் இல்லாதது உற்பத்தியை அதிகரிக்காமல் தவறான கொள்கைகளால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு ஒரு வழியாக இருந்தாலும் தடுப்பூசி என்பதே நிரந்தர தீர்வாகும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பதற்கு முக்கிய காரணம் மத்திய அரசு வரிதான் வர்களின் தவ்றான பொருளாதார கொள்கையாலேயே பெட்ரோல் டீசல் வரியை அதிகப்படுத்தியதற்கான காரணம். அது அனைத்தும் சாமானியர்கள் மீது தான் விதிக்கப்படுகிறது. நீட் தேர்வு என்பது நகர்புற மாணவர்களுக்கு எளிதாக இருந்தாலும் கிராமப்புற மாணவர்களுக்கு சிரமமாகவே உள்ளது. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது வரவேற்கத்தக்கது. அது தொடரவேண்டும். மேலும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு என்பது கட்டாயம் நடத்தப்பட வேண்டும். என்றும் அவ்வாறு இல்லாமல் ஏதோ ஒரு கணக்கில் மதிப்பெண் வழங்கினால் மாணவர்களிடையே பெரிய ஏற்றத்தாழ்வு எழ வாய்ப்புள்ளது. இதனால் நீதிமன்றத்த நாடும் நிலை ஏற்படுவதுடன் கல்லூரி சேர்க்கையில் மிக பெரிய குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.