புத்தகத்தில் உள்ளதை திருமா மேற்கோள் காட்டினார்; அவரே சொன்னதுபோல் பாஜக அரசியல் செய்கிறது- கார்த்தி சிதம்பரம்

 

புத்தகத்தில் உள்ளதை திருமா மேற்கோள் காட்டினார்; அவரே சொன்னதுபோல் பாஜக அரசியல் செய்கிறது- கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “குஷ்பு முன்னாள் நடிகை என்பதனால் அவரது கைதை பெரிதுபடுத்துகிறார்கள். இது சாதாரண நடைமுறைதான். திருமாவளவன் தனது சொந்தக் கருத்தைக் கூறவில்லை, மனுசாஸ்திரம் நூலில் கூறப்பட்ட விஷயங்களைத்தான் கூறியுள்ளார். மனுதர்மம் இந்திய அரசியல் சாசனத்தை விட உயர்ந்ததா என பாஜகவினர் தெளிவுபடுத்த வேண்டும்.

திருமாவளவன் ஏதோ ஒரு கருத்தரங்கில் பேசிய கருத்தை தற்போது போலியான போராட்டங்கள் மூலம் பாஜகவினர் தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றனர். மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற போது கிராமப்புற மாணவர்கள் நிறைய பேர் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை‌. தனியார் பள்ளி மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள மாணவர்களே அதிகமாக மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்கள். தற்போது நீட் வந்த பிறகு அதைவிட குறைந்துள்ளது. நீட் தேர்வில் கோச்சிங் கிளாஸ் செல்லாமல் யாராலும் அதிக மார்க் வாங்க முடியாது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதை செய்ய முடியாது, அதனால் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கிராமப்புறத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் இதற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.

புத்தகத்தில் உள்ளதை திருமா மேற்கோள் காட்டினார்; அவரே சொன்னதுபோல் பாஜக அரசியல் செய்கிறது- கார்த்தி சிதம்பரம்

மனுநீதியை பாஜகதான் தெளிவுபடுத்த வேண்டும், மனுநீதியை நான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை கடவுள் நம்பிக்கையும் மனு நீதியையும் ஒப்பிட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம், ஒரு புத்தகத்தில் உள்ளதை திருமாவளவன் மேற்கோள் சொல்லி காட்டியதை அவர் சொன்னது போன்று பாஜக திரித்து அரசியல் செய்கிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. 2019 ல் எப்படி வெற்றி பெற்றோமோ அதேபோல் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம்” எனக் கூறினார்.