ரூ.1,000 கோடிக்கு விவசாயிகளின் குழந்தைகளுக்கு புதிய உதவி தொகை திட்டம்.. கர்நாடக முதல்வர் அதிரடி அறிவிப்பு

ரூ.1,000 கோடிக்கு விவசாயிகளின் குழந்தைகளுக்கு புதிய உதவி தொகை திட்டம்.. கர்நாடக முதல்வர் அதிரடி அறிவிப்பு

ரூ.1,000 கோடி மதிப்பில் விவசாயிகளின் குழந்தைகளுக்கான புதிய உதவி தொகை திட்டம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை பதவியேற்ற முதல் நாளிலேயே கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்பை அறிவித்தார்.

கர்நாடகாவின் 23வது முதல்வராக பசவராஜ் பொம்மை நேற்று பதவியேற்றார். முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். ரூ.1,000 கோடி மதிப்பில் விவசாயிகளின் குழந்தைகளுக்கான புதிய உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார். விதவை ஓய்வூதியம் ரூ.600-லிருந்து ரூ.800ஆக உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். இதற்காக ரூ.414 கோடி கூடுதலாக செலவாகும். அதேசமயம் 17.25 பயனாளிகள் பயன் பெறுவர்.

ரூ.1,000 கோடிக்கு விவசாயிகளின் குழந்தைகளுக்கு புதிய உதவி தொகை திட்டம்.. கர்நாடக முதல்வர் அதிரடி அறிவிப்பு
விவசாயிகள்

திவ்யாங் மக்களுக்கு நிதி உதவி ரூ.600லிருந்து ரூ.800 உயர்த்தப்படுகிறது. இதற்கு கூடுதலாக 90 கோடி செலவாகும், 3.66 லட்சம் பேர் பயன் பெறுவர். சந்தியா சுரக்ஷா திட்டத்தின்கீழ் முதியோர் ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.1,200ஆக உயர்த்தப்படுகிறது. இதனால் 35.98 லட்சம் மக்கள் பலன் பெறுவார்கள். இதற்கு ரூ.863.52 கோடி கூடுதலாக செலவாகும்.

ரூ.1,000 கோடிக்கு விவசாயிகளின் குழந்தைகளுக்கு புதிய உதவி தொகை திட்டம்.. கர்நாடக முதல்வர் அதிரடி அறிவிப்பு
பணம்

கோவிட்-19க்கு மத்தியில் வளங்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலமும், செலவினங்களை குறைப்பதன் மூலமும நிதி ஒழுக்கத்தை பேணுவதில் மாநல அரசு கவனம் செலுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முதல்வர் பசவராஜ் பொம்மையின் இந்த அதிரடி அறிவிப்புகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.