கட்டணத்தை செலுத்தாத பெற்றோர்கள்.. கடுமையான நிதி நெருக்கடியால் மூடும் நிலையில் தனியார் பள்ளிகள்…

 

கட்டணத்தை செலுத்தாத பெற்றோர்கள்.. கடுமையான நிதி நெருக்கடியால் மூடும் நிலையில் தனியார் பள்ளிகள்…

கர்நாடகாவில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்தாததால், கடுமையான நிதி நெருக்கடி காரணமாக பல தனியார் பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளதாக அம்மாநில தனியார் பள்ளிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் இறுதி முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கா்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாக தலைமையிலான அரசு கடந்த செப்டம்பரில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்று அறிவித்தது. ஆனால் கொரோனா வைரஸ் மீண்டும் அம்மாநிலத்தில் அதிகமாக பரவ தொடங்கியதையடுத்து பள்ளிகள் திறக்க கர்நாடக அரசு தடை விதித்தது.

கட்டணத்தை செலுத்தாத பெற்றோர்கள்.. கடுமையான நிதி நெருக்கடியால் மூடும் நிலையில் தனியார் பள்ளிகள்…
பி.எஸ்.எடியூரப்பா

கர்நாடகாவில் பள்ளிகள் திறக்காததால், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெரும்பாலான பெற்றோர்கள் கல்வி கட்டணத்தை செலுத்தவில்லை. இதனால் தனியார் பள்ளிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இது தொடர்பாக கர்நாடக தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் சசி குமார் கூறியதாவது: ஆன்லைன் வகுப்புகளுக்கு தங்களால் முடிந்ததை ஆசிரியர்கள் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கூட எங்களால் கொடுக்க முடியவில்லை.

கட்டணத்தை செலுத்தாத பெற்றோர்கள்.. கடுமையான நிதி நெருக்கடியால் மூடும் நிலையில் தனியார் பள்ளிகள்…
சசி குமார்

மாநிலத்தில் மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அதில் 18 ஆயிரம் பள்ளிகள் பட்ஜெட் தனியார் பள்ளிகளாகும். இந்த பள்ளிகள் மாதந்திர கட்டணத்தை நம்பியே செயல்படுகின்றன. பட்ஜெட் தனியார் பள்ளிகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கான மாதந்திர கட்டணங்களை செலுத்தவில்லை. அரசிடமிருந்தும் எந்த உதவியும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். மாநிலத்தில் டிசம்பர் இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று கர்நாடக அரசு அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.