கர்நாடக சுகாதார துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக சுகாதார துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக சுகாதார துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் பி.ஸ்ரீராமுலு டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், தொற்று நோய்க்கான அறிகுறிகளை இருந்ததால், கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தேன். பரிசோதனை முடிவில் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

கர்நாடக சுகாதார துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் தலைமையில் எனது துறை உள்பட அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் கோவிட்-19க்கு எதிராக கடுமையாக பணியாற்றி வருகின்றன. கொரோனா தோன்றிய காலத்திலிருந்தே, 30 மாவட்டங்களுக்கும் சென்று மக்களை நன்றாக நடத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இசைவாக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னணியில்தான் நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறப்போகிறேன்.

கர்நாடக சுகாதார துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி

சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என பதிவு செய்து இருந்தார். இந்த மாத தொடக்கத்தில் கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனை தொடர்ந்து கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதால் அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.