கர்நாடகாவில் இன்று இரவு முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வாபஸ்

 

கர்நாடகாவில் இன்று இரவு முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வாபஸ்

புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று அறிவித்தார். உருமாறியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு போடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இரவு நேர முழு ஊரடங்கின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

கர்நாடகாவில் இன்று இரவு முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வாபஸ்

இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை எந்த கட்டுபாடுகளும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் அடங்கிய தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரைகளை ஏற்று அரசு இத்தகைய முடிவு எடுத்துள்ளது. தற்போது இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறபட்டதால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

முன்னதாக ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளன