ஜூன் 1 ஆம் தேதி முதல் கோயில்களை திறக்கலாம்: கர்நாடக அரசு!

 

ஜூன் 1 ஆம் தேதி முதல் கோயில்களை திறக்கலாம்: கர்நாடக அரசு!

கொரானா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. 4 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி முடிவடையவுள்ளது.

ஜூன் 1 ஆம் தேதி முதல் கோயில்களை திறக்கலாம்: கர்நாடக அரசு!

இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதிக்கு பின்னர் மக்கள் கூடும் பொது இடங்களை திறப்பது தொடர்பாக மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் திருவிழாக்கள் நடத்த தடை தொடரும் என்றும் அறிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்று அதிகமில்லாத மாநிலங்களில் இயல்புநிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று புதிதாக 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2283 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44-ஆக அதிகரித்துள்ளது.