இந்தியாவில் முதன்முறையாக தோல் பூஞ்சை நோய் தாக்குதல்: பீதியில் மக்கள்!

 

இந்தியாவில் முதன்முறையாக தோல் பூஞ்சை நோய் தாக்குதல்: பீதியில் மக்கள்!

கொரோனா நோயாளிகளை தாக்கும் தோல் பூஞ்சை நோய் என்ற மற்றொரு உண்மை தற்போது தெரியவந்துள்ளது மருத்துவத்துறைக்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடகத்தில் கொரோனா நோயாளி ஒருவருக்கு தோல் பூஞ்சை நோய்
தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் சித்ரதுர்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து அவர் கொரோனாவிலிருந்து இருந்து குணமடைந்தார்.

இந்தியாவில் முதன்முறையாக தோல் பூஞ்சை நோய் தாக்குதல்: பீதியில் மக்கள்!

இருப்பினும் அவருக்கு காது பகுதியில் பூஞ்சை உருவாகியுள்ளது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட. து இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மைசூரில் உள்ள அரசு காது ,மூக்கு பிரிவு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்து நிலையில் அவருக்கு தோல் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் முதன்முறையாக தோல் பூஞ்சை நோய் தாக்குதல்: பீதியில் மக்கள்!

தொற்றினால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருவது கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வருகிறது. இந்த சூழலில் கர்நாடகாவில் ககொரோனா நோயிலிருந்து மீண்ட ஒருவருக்கு தோல் பூஞ்சை நோய் தாக்கப்பட்டு இருப்பது இந்தியாவிலேயே இதுவே முதல்முறை என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோல் பூஞ்சை நோய் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய் இல்லை என மருத்துவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நோய் வேறு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ள மருத்துவர்கள் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.