சசிகலா விடுவிக்க பரிந்துரைத்த கர்நாடக சிறைத்துறை… விடுதலை எப்போது?

 

சசிகலா விடுவிக்க பரிந்துரைத்த கர்நாடக சிறைத்துறை… விடுதலை எப்போது?

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை விடுவிக்க சிறைத்துறை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் சசிகலா செப்டம்பர் 13ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக விடுதலையாக வாய்ப்புள்ளதாக சிறைத்துறை ஓய்வு பெற்ற அதிகாரி கணித்துள்ளார்.

சசிகலா விடுவிக்க பரிந்துரைத்த கர்நாடக சிறைத்துறை… விடுதலை எப்போது?சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகால சிறை தண்டனை வழங்கியது கர்நாடக சிறப்பு நீதிமன்றம். இதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தற்போது கர்நாடக சிறையில் உள்ளனர். சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வர உள்ளார், அதனால் அ.தி.மு.க நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. சசிகலா வந்தால் போயஸ் இல்லத்துக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக அந்த இல்லத்தை அரசு கையகப்படுத்துவதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது.
சசிகலா இப்போது விடுதலையாவர், அப்போது விடுதலையாவர் என்று பரவலாக பேச்சு உள்ள நிலையில், நன்னடத்தை விதிகள் கீழ் சசிகலாவை விடுதலை செய்ய கர்நாடக சிறைத்துறை பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிறை விதிகளை மீறி, சல்வார் அணிந்து ஷாப்பிங் சென்று வந்ததாக சர்ச்சையில் சிக்கியவர் சசிகலா. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படி இருக்கும்போது அவருக்கு எப்படி நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சசிகலா விடுவிக்க பரிந்துரைத்த கர்நாடக சிறைத்துறை… விடுதலை எப்போது?கர்நாடக சிறைத்துறை பரிந்துரைத்தது உண்மை என்றால் சசிகலாவின் விடுதலை எப்போது வேண்டுமானாலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் நிராகரிக்கப்பட்டாலும் இன்னும் ஒரு சில மாதங்களில் அவர் வெளியே வந்துவிடுவார் என்று சிறைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவருடைய கணக்குப் படி, சசிகலாவுக்கு தண்டனை உறுதியான நாள் 2017 பிப்ரவரி 14. அதன்படி நான்கு ஆண்டு சிறைத் தண்டனை முடிந்து அவர் விடுதலையாகும் நாள் என்பது 2021 பிப்ரவரி 13. இந்த வழக்குக்காக முன்பே 21 நாள் அவர் சிறையிலிருந்துள்ளார். அதை கழித்தால் விடுதலை 23.1.2021. இது தவிர மாதத்துக்கு நான்கு நாட்கள் கழிவு, நன்னடத்தை கழிவு கணக்கீடு, பரோலில் அவர் வந்த நாட்கள் உள்ளிட்டவற்றை வைத்துப் பார்த்தால் வருகிற செப்டம்பர் 13ம் தேதி அவர் விடுதலையாக வேண்டும். இது தவிர சாதாரண தண்டனைக் குறைப்பு, சிறப்பு தண்டனைக் குறைப்பு, அரசால் வழங்கப்படும் சிறப்பு தண்டனைக் குறைப்பு உள்ளிட்டவையும் உள்ளன. தலைவர்கள் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி, சுதந்திரதினம் போன்ற முக்கிய தினங்களையொட்டி கைதிகள் விடுதலை செய்யப்படுவது உண்டு.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது செப்டம்பர் 13 அல்லது அதற்கு முன்னதாக சசிகலா உள்ளிட்டவர்கள் சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார் ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரி ராமச்சந்திரன்.