கொரோனா பாதிப்பால் கர்நாடக எம்பி அசோக் கஸ்தி காலமானார்!

 

கொரோனா பாதிப்பால் கர்நாடக எம்பி அசோக் கஸ்தி காலமானார்!

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்நாடக எம்பி அசோக் கஸ்தி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பல தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பலர் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தனர். இதனிடையே சில தலைவர்கள் கொரோனாவால் உயிரிழக்கவும் நேர்ந்தது. இந்த நிலையில், கர்நாடக எம்.பிஅசோக் கஸ்தி கொரோனாவால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் கர்நாடக எம்பி அசோக் கஸ்தி காலமானார்!

கடந்த 2 ஆம் தேதி கர்நாடக பாஜக எம்.பி அசோக் கஸ்திக்கு கொரோனா உறுதியானதால், அவர் பெங்களூருவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக கவலைக்கிடமாக இருந்ததால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.