கர்நாடக பா.ஜ.க.வில் புதிய குழப்பம்.. முதல்வர் எடியூரப்பா மீது கவர்னரிடம் பா.ஜ.க. அமைச்சர் புகார்

 

கர்நாடக பா.ஜ.க.வில் புதிய குழப்பம்.. முதல்வர் எடியூரப்பா மீது கவர்னரிடம் பா.ஜ.க. அமைச்சர் புகார்

கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தேவையில்லாமல் தனது துறையில் தலையீடுவதாக அம்மாநில கவர்னரிடம் பா.ஜ.க. அமைச்சர் புகார் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடாகவில் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ துறை அமைச்சராக இருப்பவர் கே.எஸ். ஈஸ்வரப்பா. இவர் தனது துறையில் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தலையீடுவதாகவும், தனக்கு தெரியாமல் தனது துறைக்கு நிதி ஒதுக்குவதாகவும் அம்மாநில கவர்னரிடம் புகார் கொடுத்துள்ளார்.

கர்நாடக பா.ஜ.க.வில் புதிய குழப்பம்.. முதல்வர் எடியூரப்பா மீது கவர்னரிடம் பா.ஜ.க. அமைச்சர் புகார்
கே.எஸ்.ஈஸ்வரப்பா

கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அம்மாநில கவர்னர் வாஜூபாய் வாலாவிடம் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராக எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளார். அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கொடுத்துள் புகாரில், முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தனது துறையில் தலையீடுகிறார் மேலும் எனது துறையின் நிதியில் இருந்து ரூ.774 கோடியை அவர் அனுமதித்தார். எனக்கு தெரியாமல் பணத்தை அனுமதிக்குமாறு முதல்வர் எடியூரப்பா எனது துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தார்.

கர்நாடக பா.ஜ.க.வில் புதிய குழப்பம்.. முதல்வர் எடியூரப்பா மீது கவர்னரிடம் பா.ஜ.க. அமைச்சர் புகார்
ஜே.பி. நட்டா, மோடி, அமித் ஷா

எனது துறை விவகாரங்களில் தலையிட்டு, கர்நாடக அரசின் விதிமுறைகள் 1977-ஐ முதல்வர் மீறிவிட்டார். எனவே நீங்கள் (கவர்னர்) இந்த விவகாரத்தில் தலையிட்டு, விதிகள் மற்றும் நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு முதல்வரிடம் அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் நநேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு ஈஸ்வரப்பா தகவல் தெரிவித்துள்ளார். கர்நாடக பா.ஜ.க.வுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் அம்மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.