சமூக விலகல் விதிமுறைகளை மீறும் பா.ஜ.க. தலைவர்கள்…. இந்த முறை சிக்கியது கர்நாடக பா.ஜ.க. அமைச்சர்..

ஊருக்குதான் உபதேசம் தனக்கில்லை என பழமொழி சொல்வார்கள். இந்த பழமொழி பா.ஜ.க.வில் உள்ள பல தலைவர்களுக்கு கட்டாயம் பொருந்தும். கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. இருப்பினும் தற்போது லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. அதேசமயம் பொதுமக்கள் வீட்டை வெளியே செல்லும் மாஸ்க் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு அறிவுறுத்தியுள்ளது.

அமைச்சர் பி.ஸ்ரீராமுலு

அந்த அறிவுரைகள் எல்லாம் பொதுமக்களுக்குதான் நமக்கில்லை என்பது போல் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களே லாக்டவுன் மற்றும் சமூக விலகல் விதிமுறைகளை மீறி வருகின்றனர். இது தற்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில நேற்று கர்நாடகாவில் அம்மாநில சுகாதார துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு ஒரு ஊர்வலத்தில் பங்கேற்றதோடு சமூக விலகல் விதிமுறைகளை மீறிய சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பங்கேற்ற ஊர்வலம்

அந்த வீடியோவில், நாடே கொரோனா வைரஸ் நெருக்கடியால் சிக்கி தவிக்கும் நேரத்தில், சித்ரதுர்காவில் நடைபெற்ற ஊர்வலத்தில் அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பங்கேற்றதும், அவரை சுற்றி ஏராளமான தொண்டர்கள் நிற்பதும் அதுவேளையில் அவருக்கு பெரிய மாலை வழங்கப்படுவதும் அதில் தெளிவாக தெரிகிறது. ஒரு மாநில அமைச்சரே சமூக விலகல் விதிமுறைகள் மீறலில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி கர்நாடகாவில் மொத்தம் 3,408 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...