எடியூரப்பா நல்லா இருக்கிறார்… சித்தராமையாக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கு.. கர்நாடக அமைச்சர் தகவல்

 

எடியூரப்பா நல்லா இருக்கிறார்… சித்தராமையாக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கு.. கர்நாடக அமைச்சர் தகவல்

கர்நாடகவின் தற்போதைய முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவும், எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையாவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள மனிபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் பி ஸ்ரீராமுலு நேற்று மனிபால் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

எடியூரப்பா நல்லா இருக்கிறார்… சித்தராமையாக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கு.. கர்நாடக அமைச்சர் தகவல்

மனிபால் மருத்துவமனை டாக்டர்களிடம் ஆலோசனை செய்து விட்டு செய்தியாளர்களிடம் அமைச்சர் பி. ஸ்ரீராமுலு பேசினார். அப்போது அமைச்சர் கூறுகையில், முதல்வர் பி.எஸ். எடியூரப்பா உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறது. அதேசமயம் எதிர்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு காய்ச்சல் அதிகமாக உள்ளது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

எடியூரப்பா நல்லா இருக்கிறார்… சித்தராமையாக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கு.. கர்நாடக அமைச்சர் தகவல்

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. மேலும் அதற்கு அடுத்த நாள் அவரது மகளுக்கும், முதல்வர் அலுவலக பணியாளர்கள் 6 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எதிர்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு நேற்று காலையில்தான் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.