கொரோனா வைரஸிலிருந்து நம்மை கடவுளால் மட்டும்தான் காப்பாற்ற முடியும்.. கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர்

கொரோனா வைரஸிலிருந்து நம்மை கடவுளால் மட்டும்தான் காப்பாற்ற முடியும்.. கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர்

கர்நாடகாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,253ஆக உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு கூறியதாவது:

கொரோனா வைரஸிலிருந்து நம்மை கடவுளால் மட்டும்தான் காப்பாற்ற முடியும்.. கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர்

இந்த நேரத்தில் நம்மை யார் காப்பாற்ற முடியும்? கடவுள் அல்லது மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் குழப்பத்தில் ஈடுபடுகின்றனர். இது சரியல்ல, அது எந்தவகையில் அவர்களுக்கு உதவாது. இது முக்கியமான நேரம். பொது மக்களின் நலனுக்காக இந்த விவகாரம் தொடர்பாக தளர்வாக பேச வேண்டாம் என காங்கிரஸ் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். நாங்கள் ஏதாவது தவறு செய்து இருந்தால் தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸிலிருந்து நம்மை கடவுளால் மட்டும்தான் காப்பாற்ற முடியும்.. கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர்

கடவுள்தான் கர்நாடகாவை காப்பாற்ற வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு கூறியதையடுத்து, எதிர்கட்சியான காங்கிரஸ் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் டிவிட்டரில், கர்நாடகாவின் சுகாதார துறை அமைச்சர் கடவுள் மட்டும்தான் கா்நாடகாவை காப்பாற்ற முடியும் என கூறுவது, முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசின் கோவிட் நெருக்கடியை கையாளும் திறனை பற்றி மோசமாக பிரதிபலிக்கிறது. தொற்றுநோயை சமாளிக்க முடியாவிட்டால் நமக்கு இது போன்ற அரசு ஏன் தேவை? இந்த அரசாங்கத்தின் திறமையின்மை குடிமக்களை கடவுளின் கருணைக்கு தள்ளியுள்ளது என பதிவு செய்து இருந்தார்.