காலியான பவர்… டம்மியான எடியூரப்பா – சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்!

 

காலியான பவர்… டம்மியான எடியூரப்பா – சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்!

எடியூரப்பாவை பதவியில் ஏற்றி அழகு பார்ப்பதும், எதிர்பார்க்காத ட்விஸ்டாக அரியணையை விட்டு இறக்கிவிடும் வேலையை படுஜோராக பாஜக தலைமை செய்து வந்திருக்கிறது. 2007ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வரலாறு இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு முறை முதலமைச்சராகியும் ஒருமுறை கூட ஐந்தாண்டுகள் பதவிக்காலத்தை அவர் நிறைவு செய்ததில்லை. 75 வயதைத் தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படும்.

காலியான பவர்… டம்மியான எடியூரப்பா – சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்!

ஆனாலும் 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதலமைச்சர் பதவியை டெல்லி மேலிடம் கொடுத்தது. ஆனால் அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் பதவி விலக வேண்டும் என்று கையெழுத்திடாத ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்படியே பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்ற ஜூலை 27ஆம் தேதி ராஜினாமா செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இது வெளிப்படையான காரணமாகக் கூறப்பட்டாலும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியில் அவரது மகன் விஜயேந்திராவின் தலையீடு இருந்ததே மிக முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது.

காலியான பவர்… டம்மியான எடியூரப்பா – சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்!

பாஜக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க பிளான் போட்டு வெற்றிக்கரமாக தூக்கிவிட்டார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக 2020ஆம் ஆண்டு எடியூரப்பா மீதும் அவர் மகன் மீதும் ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டது. பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.ஜே.ஆப்ரஹாம், எடியூரப்பா, அவரது மகனுக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர்கள் இருவர் உள்பட 8 பேர் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் வீட்டு வசதி திட்ட குடியிருப்புகள் கட்டுவதில் ஊழல் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

காலியான பவர்… டம்மியான எடியூரப்பா – சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்!
எடியூரப்பா, விஜயேந்ந்திரா

இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு விசாரணையின்போது டி.ஜே.ஆப்ரஹாம், ”எடியூரப்பா தற்போது முதல்வர் பதவியில் இல்லாததால் ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை. எனவே நீதிமன்றம் அவரை விசாரிக்க வேண்டும்” என கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எடியூரப்பா, விஜயேந்திரா உள்ளிட்ட 8 பேர் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.